புதன், 14 அக்டோபர், 2015

CPM கட்சி மிதவாதக் கட்சி என்பதற்கான சான்றுகள்:
---------------------------------------------------------------------------------------
1) தோழர்  ஈ கே நாயனார் போப்பண்டவரைச் சந்தித்தபோது
அவருக்கு பகவத் கீதையை  வழங்கினார். மார்க்சிஸ்ட்
மத்தியக் கமிட்டி உறுப்பினரான அவர், ஒரு சனாதன இந்துவாக
நடந்து கொண்டார்.

2) பேரப்பிள்ளைகளுக்கு பூணூல் போடும் விழாவுக்கு
பத்திரிக்கை அடித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு
விநியோகித்தார் சோம்நாத் சட்டர்ஜி. இவரும் ஒரு CC மெம்பர்.
இந்த நிகழ்வுக்குப் பிறகும் அவர் சபாநாயகராக CPM தலைமையால்
ஆக்கப் பட்டார்.

3) குலக்கல்வித் திட்டம் கொண்டு வந்த ராஜாஜி பதவி இழந்து
காமராசர் முதல்வர் ஆகிறார். குடியாத்தம் தொகுதியில்
தேர்தலில் நிற்கிறார். காங்கிரசின் பரம வைரியாக அன்று இருந்த
திமுக காமராசரை ஆதரிக்கிறது; வேட்பாளரை நிறுத்தவில்லை.
ஆனால், ராஜாஜியின் ஆலோசனைப்படி, காமராசரை எதிர்த்து
வேட்பாளரை நிறுத்துகிறார் பி ராமமூர்த்தி. குலக்கல்வித்
திட்டத்தை அன்றைய கம்யூனிஸ்ட் கட்சியின் பார்ப்பனத்
தலைவர ராமமூர்த்தி மறைமுகமாக ஆதரித்தார்.
**
இன்னும் வண்டி வண்டியாகச் சொல்லலாம். இவையெல்லாம்
எதைக் காட்டுகின்றன. CPM கட்சி மிதவாத இந்துத்துவக் கட்சி
என்பதையே.
**
ஒரு தலித்துக்குக் கூட மத்தியக் கமிட்டியில் காலம் காலமாக
இடம் கொடுக்காத கட்சி CPM கட்சி. இதை மிதவாத
இந்துத்துவம் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது.
**
அருணன் போன்றவர்களின் நூல்களை நீங்கள் படியுங்கள்.
மறைந்த மார்க்சிய லெனினியப் புரட்சியாளர் தோழியர்
அனுராதா காந்தி எழுதிய "Scripting the change" என்ற நூலை
புரட்சியை நேசிக்கும் இளைஞர்களுக்கு நாங்கள் படிக்கக்
கொடுக்கிறோம். அந்தப் புத்தகம் நிச்சயமாக
குட்டிமுதலாளித்துவ வாசகர்களுக்கு அல்ல.
அவர்களுக்குத்தான் அருணன் இருக்கிறாரே.        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக