வெள்ளி, 16 அக்டோபர், 2015

தீவிர வலதுசாரி எழுத்தாளரான திரு ஜெயமோகனை நாங்கள்
ஏற்கவில்லை. அவரின் கருத்துக்கள் முறியடிக்கப்பட
வேண்டியவை என்பதால் அவற்றின் திவால் தன்மையை
(bankrupt ideas) நாங்கள் அம்பலப் படுத்தி வருகிறோம். ஆனால்,
தங்களின் பதிவுகளில் பொதுவாகவும், இந்தப் பதிவில்
குறிப்பாகவும், அவர் மீதான தங்களின் காழ்ப்புணர்வு மிக்க
வசைதான் வெளிப் படுகிறது. காத்திரமான எதிர்வினை
எதுவும் அவரின் கருத்துக்கள் குறித்து தாங்கள் ஆற்றவில்லை
என்பதை வருத்தத்துடன் சுட்டுகிறோம்.
**
மார்க்சிஸ்ட் தொழிற்சங்கவாதி எப்படி சிந்திப்பான் என்று
இவருக்கு எப்படித் தெரியும் என்ற உங்களின் கேள்வி
அறியாமையின் பாற்பட்டது என்பதை வருத்தத்துடன்
சுட்டிக் காட்டுகிறோம். தோழர் ஜெயமோகன் எங்களுடன்
BSNL நிறுவனத்தில் பணியாற்றியவர். INTUC, BMS ஆகிய
சங்கங்களை இகழ்ச்சியுடன் நிராகரித்து விட்டு, மார்க்சியச்
சங்கமான எங்கள் NFTE (National Federation of Telecom Employees)
சங்கத்தில் சேர்ந்தார். எங்கள் தலைவர் தோழர் ஒ பி குப்தா
அவர்களின் தலைமையை ஏற்றுச் செயல்பட்டவர்.
NFTE சங்கத்தில் கிளை மற்றும் மாவட்டச் சங்கங்களில்
பொறுப்பேற்றுப் பணியாற்றியவர்.
**
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நடந்த வரலாற்றுச் சிறப்பு
மிக்க வேலைநிறுத்தத்தில் (செப் 6,7,8) பங்கேற்காமல்
CPM கட்சியின் ஆதரவாளர்கள் கருங்காலித்தனம் செய்தபோது,
அதை உறுதியுடன் எதிர்கொண்டு முறியடித்ததில் தோழர்
ஜெயமோகன் அவர்களுக்கும் சிறப்புமிக்க பங்கு உண்டு.
தோழர் ஜெயமோகன் எங்களின் NFTE சங்கத்தில், இன்றும்
நினைவுகூரப் படுகிற ஒரு தொழிற்சங்க முன்னோடி.
**
எனவே அவரால்  ஒரு மார்க்சிஸ்ட் தொழிற்சங்கவாதி
எப்படிச் சிந்திப்பான் என்று சொல்ல முடியும்.
காரணம் அனுபவம்.
**
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.     
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக