வெள்ளி, 16 அக்டோபர், 2015

மோடிக்கு எதிராக தென்னிந்திய எழுத்தாளர்கள்
அணி திரண்டு விருதுகளை வீசி எறிகின்றனர்!
ஆனால் தமிழ்நாடு மட்டும் ஒதுங்கி நிற்கிறது!
தமிழக இடதுசாரிகளின் மோடி அடிவருடித்தனம்!
----------------------------------------------------------------------------------
1) வட இந்திய எழுத்தாளர்களைத் தொடர்ந்து கன்னட
எழுத்தாளர்கள் பலரும் தாங்கள் பெற்ற சாகித்ய அகாடமி
விருதுகளைத் திருப்பிக் கொடுத்தனர்.

2) அடுத்து, மலையாள எழுத்தாளர்கள் சாரா, சச்சிதானந்தன்
ஆகியோர் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
3) தற்போது, தெலுங்கு எழுத்தாளர் பூபால் ரெட்டி (வயது 56)
2011இல் பெற்ற விருதைத் திருப்பித் தருகிறார்.

4) கர்நாடகத்தில் பால சாகித்ய விருது பெற்ற ஒரு
பதினேழு வயதுச் சிறுமியான முற்று தீர்த்தஹள்ளி
(ப்ளஸ் டூ மாணவி, ஷிமோகா) என்கிற சிறுமி
விருதைத் திருப்பித் தருகிறார்.

5) ஆனால், தமிழ்நாட்டில், எந்த ஒரு இடதுசாரி எழுத்தாளரும்
இதுவரை விருதைத் திருப்பித் தரவில்லை. தமுஎகச,
கலை இலக்கியப் பெருமன்றம் என்று இரண்டு எழுத்தாளர்
சங்கங்களை நடத்தும் CPI, CPM கட்சிகள் மயான அமைதியில்
இருக்கிறார்கள். அறுக்க மாட்டாதவன் இடுப்பில் அம்பத்தெட்டு
அரிவாள் என்பதைப் போல, போராடத் துணியாத இவர்கள்
அமைப்பு நடத்துவது எதற்காக?  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக