சனி, 17 அக்டோபர், 2015

இரண்டாம் குல்லுக பட்டர் கம்யூனிஸ்ட் தலைவர்
ராமமூர்த்தியே! 
-------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
-----------------------------------------------------------------------------------
தந்தை பெரியாரின் போராட்டத்தால் குலக்கல்வியைக் 
கொண்டு வந்த குல்லுக பட்டர் ராஜாஜி முதல்வர் பதவியில் 
இருந்து விலகினார். காமராசர் முதல்வர் ஆகிறார். இது
நிகழ்ந்தது ஏப்ரல் 1954இல்.

முதல்வராகும்போது காமராசர் ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்ற
உறுப்பினராக இருந்தார். முதல்வர் ஆகிவிட்ட படியால்,
தமிழக சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும். அதற்காக,
குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் (1954)
போட்டியிட்டார். 

காமராசரை எதிர்த்து திமுக போட்டியிடாது என்று அறிஞர்
அண்ணா அறிவித்தார். திமுகவின் பரம வைரி காங்கிரஸ்
என்றபோதிலும், குலக்கல்வித் திட்டத்தை முடிவுக்குக்
கொண்டுவர இருக்கும் காமராசரை எதிர்த்து திமுக
போட்டியிடாது என்று அறிஞர் அண்ணா மக்கள் நலன்
கருதி முடிவெடுத்தார்.

அறிஞர் அண்ணாவின் முடிவு ராஜாஜிக்குப் பெரும்
அதிர்ச்சியாக அமைந்தது. எப்படியும் காமராசரை எதிர்த்துப்
போட்டியிட வேண்டும் என்றும் காமராசருக்கு கடும்
எதிர்ப்பு தமிழ்நாட்டில் இருக்கிறது என்று நேருவுக்குப்
புரிய வைக்க வேண்டும் என்றும் ராஜாஜி எண்ணினார்.

ராஜாஜிக்கு உள்ள சிக்கல் என்னவெனில், இருவருமே
(ராஜாஜியும் காமராசரும்) காங்கிரஸ் கட்சியினர். எனவே
காங்கிரஸ் வேட்பாளரான காமராசரை எதிர்த்து
ராஜாஜியால் வேட்பாளரை நிறுத்த முடியாது. காங்கிரசைக்
கடுமையாக எதிர்த்து வந்த திமுகவோ போட்டியிடவில்லை.

இந்நிலையில் ராஜாஜி, அன்றைய பிரபல கம்யூனிஸ்ட்
தலைவர் பி ராமமூர்த்தியை நாடினார். ராஜாஜியின்
வேண்டுகோளை ஏற்று, பி ராமமூர்த்தி காமராசரை
எதிர்த்து கம்யூனிஸ்ட் வேட்பாளரை நிறுத்தினார்.
குலக்கல்வித் திட்டத்தை மறைமுகமாக ஆதரித்த
பி ராமமூர்த்தியும் காமராசர் முதல்வர் ஆவதை
விரும்பவில்லை. எனவே ராஜாஜியின் ஆசியுடன்
கம்யூனிஸ்ட் வேட்பாளர் காமராசரை எதிர்த்துப்
போட்டியிட்டார். திமுகவினர் முழுவதும் காமராசரை
ஆதரித்து வாக்களித்தனர். காமராசர் வென்றார்.

ராமமூர்த்தி-ராஜாஜி கூட்டுச் சதி அறிஞர் அண்ணாவால்
முறியடிக்கப் பட்டது. வெற்றி பெற்ற காமராசர்
குலக்கல்வித் திட்டத்தை குப்பையில் வீசி எறிந்தார்.

(இந்த பி ராமமூர்த்தி பின்னாளில் மார்க்சிஸ்ட் கட்சியில்
(CPM) சேர்ந்தார். இந்த நிகழ்வு நடக்கும்போது கம்யூனிஸ்ட்
கட்சி பிளவுபடாத கட்சியாக இருந்தது. 1962 இந்திய-சீனப்
போருக்குப் பின்னர் 1964இல் கம்யூனிஸ்ட் கட்சி
உடைந்து மார்க்சிஸ்ட் கட்சி தோன்றியபோது, ராமமூர்த்தி
மார்க்சிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில்
ஒருவர் ஆனார்.)

இந்த நிகழ்வைத் தொடர்ந்து திக, திமுக கட்சிகளின்
மேடைகளில் ராமமூர்த்தியை இரண்டாம் குல்லுக பட்டர்
என்று வர்ணித்து பேச்சாளர்கள் பேசினார். அதை மக்களும்
ஏற்றுக் கொண்டனர். அதுமுதல் பி ராமமூர்த்தி இரண்டாம்
குல்லுக பட்டர் என்று அழைக்கப் படுகிறார்.

தெலுங்கரான நரசிம்மராவ் பிரதமர் ஆகிறார். அப்போது அவர்
நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. எனவே நந்தியால்
தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து
தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடவில்லை. ஒரு தெலுங்கர்
பிரதமர் ஆகும்போது, அதற்கு எதிராக இருக்கக் கூடாது
என்ற இன உணர்வுடன் தெலுங்கு தேசம் கட்சி செயல்பட்டது.
ஆனால் பார்ப்பன ராமமூர்த்தியோ தமிழரான காமராசர்
முதல்வர் ஆவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வேட்பாளரை
நிறுத்தினார். எனவே அவர் இரண்டாம் குல்லுக பட்டர் ஆனார்.
***************************************************************** 
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக