வெள்ளி, 16 அக்டோபர், 2015

இதில் நான் பதில் சொல்ல என்ன இருக்கிறது?
1983 ஜூலை இனக்கலவரம் முதற்கொண்டு தீவிரமாக
ஈழ ஆதரவு நிலை எடுத்துச் செயல்பட்டவன் நான்.
தோழர் சிவாஜிலிங்கம், செஞ்சோலை துயர நிகழ்வுக்குப்
பிறகு, சில முக்கியமான விடயங்களை நிறைவேற்ற
சென்னையில் முனைந்தபோது, அவருக்கு அவர் கோரிய
விடயங்களை நிறைவேற்றித் தந்தவன் நான். நிற்க.
**
நான்காம் கட்ட ஈழப்போரின் போது, ஈழத் தமிழரைக்
காக்கக் கோரி, தமிழ்நாடு பெரும் அழுத்தத்தை மத்திய
அரசுக்குக் கொடுத்தது. ரகுமானும் அவர் பெற்ற ஆஸ்கார்
விருதும் அதைத் திருப்பிக் கொடுப்பதன் மூலமாக
இந்திய அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுப்பதும்  போன்ற
விடயங்களை விட, அதி முக்கியமான விடயங்கள்
அன்று மேற்கொள்ளப் பட்டன.  விடயம் முற்றிப்போய்
நிர்ணயகரமான கட்டத்தை எட்டி விட்டதால்,
விருதுகளைத் திருப்பிக் கொடுத்தல் போன்ற
தொடக்கநிலை நடவடிக்கைகள் அன்று மேற்கொள்ளப்
படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக