புதன், 14 அக்டோபர், 2015

மார்க்சியத்தின் வரலாற்றில் கணிசமான பகுதி
போலிகளை எதிர்த்த வரலாறே. கம்யூனிஸ்ட் அறிக்கை
முதலாக பல்வேறு மார்க்சிய இலக்கியங்களில்  இது
காணப்படுகிறது. போலி சோஷலிசத்தை எதிர்த்த மார்க்ஸ்
அதற்கு மாற்றாக விஞ்ஞான சோஷலிசத்தை முன்வைத்தார்.
**
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பார் யாம்கண்டது இல்
என்கிறார் வள்ளுவரும். ஆதி சங்கரரை ஆதரித்து
நூல் எழுதிய இ.எம்.எஸ் நம்பூதிரிபாட்,
குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்த பி ராமமூர்த்தி,
போப்பாண்டவரைச் சந்தித்தபோது இந்தியப் பண்பாட்டின்
அடையாளம் என்று பகவத்கீதையைப் பரிசளித்த
ஈகே நாயனார், பேரப்பிள்ளைகளுக்கு பூணூல் போட்ட
சோம்நாத் சட்டர்ஜி என்று CPM தலைவர்களின் இந்துத்துவக்
கைங்கரியம் நீள்கிறது. எனவேதான் இவர்களைப் போலிக்
கம்யூனிஸ்ட்கள் என்கிறோம். மக்களும் அதை ஏற்றுக்
கொண்டு விட்டார்கள்.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக