ராமகோபாலன் எட்டாங்கிளாஸ் பெயில்!
-----------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
------------------------------------------------------------------
விஜயதசமி, ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை ஆகிய
பண்டிகைகள் முடிந்து விட்டன. தமிழ்நாட்டில் இந்தப்
பண்டிகைகள் பெரிய அளவில் என்றுமே கொண்டாடப்
பட்டதில்லை.
இந்தியாவிலேயே நவராத்திரி, விஜயதசமிக் கொண்டாட்டங்கள்
சிறப்பாக நடக்கும் இடம் எது? மைசூர் என்று சிலர் கூறலாம்.
அது உண்மை அல்ல. கல்கத்தாவில் நடைபெறும் துர்கா
பூஜைக் கொண்டாட்டங்களே, மிகவும் பகட்டாகவும்
செழிப்பாகவும் கொண்டாடப் படுகின்றன. இந்தியாவின்
எந்த மாநிலமும், துர்கா பூசைக் கொண்டாட்டத்தில்
மேற்கு வங்கத்தையும் கொல்கத்தாவையும் விஞ்ச முடியாது.
அதிலும் துர்கா பூசைக் கொண்டாட்டங்கள் அவற்றின்
உச்சத்தைத் தொட்டது மார்க்சிஸ்ட்களின் ஆட்சியில்தான்.
புத்ததேவ் பட்டச்சார்யா முதல்வராக இருந்தபோது
நடைபெற்ற துர்கா பூசைக் கொண்டாட்டங்களுக்கு
இந்த உலகில் ஈடு இணை இல்லை.
துர்கா பூஜையின்போது கொல்கத்தாவில் ஒரு சில
நாட்களாவது இருந்தவர்கள் இந்த உண்மையை எளிதில்
உணர முடியும்.
துர்காபூசைக் கொண்டாட்டங்களைப் பொறுத்த மட்டில்
புத்ததேவ் பட்டாச்சார்யா பி.ஹெச்டி (PhD) பட்டம்
பெறுகிறார் என்றால், ராமகோபாலன் எட்டாங்கிளாஸ்
பெயில் என்ற தகுதியைத்தான் பெறுகிறார்.
ஒருவேளை, புரட்சி கிரட்சி வெற்றி பெறுவதற்காகத்தான்
துர்கா பூஜை செய்கிறார்களோ மேற்கு வங்க
மார்க்சிஸ்ட்டுகள்!
துர்காபூஜா ஜிந்தாபாத்!
இன்குலாப் ஜிந்தாபாத்!!
*****************************************************************88

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக