செவ்வாய், 20 அக்டோபர், 2015

கட்சி கட்டுவதில் உலகிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்
லெனின். இங்கு கட்சி என்பது புரட்சிகரக் கட்சியை மட்டுமே
குறிக்கும். அன்றைய சோவியத் நாட்டின் சமூக-ஜனநாயகக்
கட்சியில் லெனின் என்றுமே (அதாவது புரட்சிக்கு முன்பு)
பெரும்பான்மை பெற்றதில்லை. இது குறித்து 'ஓரடி முன்னால்,
ஈரடி பின்னால்' என்ற நூலில் விளக்கி இருப்பார்.
**
கட்சி கட்டுதலில் லெனின் ஏற்றுக் கொண்ட கோட்பாடு
ஜனநாயக மத்தியத்துவம் (democratic centralism)ஆகும்.
அதாவது, "முடிவெடுக்கும் வரை ஜனநாயகம், முடிவு
எடுத்தபின் மத்தியத்துவம்" என்பதே இக்கோட்பாடு.
**
ஆயினும், ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாட்டை
மாவோ முழுவதுமாக ஏற்கவில்லை. எது சரி, எது தப்பு
என்று கட்சியால் முடிவு எடுக்க முடியாத சூழலையும்
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சந்தித்தது. இந்தச் சூழ்நிலையில்
"இருவழிப்பாதை" (two line path) என்ற கோட்பாட்டை மாவோ
முன்வைத்தார். கட்சிக்கு முன்னே இருக்கிற இரு வழிகளையும்
கட்சி நடைமுறைப் படுத்துவது; இந்த அனுபவத்தில்
கிடைக்கும் படிப்பினையில் இருந்து எது சரியானது
என்பதைத் தீர்மானிப்பது. இதுதான் மாவோ காட்டிய
இருவழிப்பாதை.
**
இத்தாலியின் கிராம்சி கட்சி கட்டுதலில் குடிமைச்
சமூகத்தின் பங்கை வலியுறுத்துகிறார்.
**
கீழ்த்தஞ்சை மாவட்டத்திலும், ஆந்திரத்தில் தெலுங்கானா
பகுதியிலும் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி (அன்றைய CPI)
பெருமளவில் தலித்துகளைச் சேர்த்து கட்சி கட்டுதலில்
பெரும் வெற்றி பெற்றது.
**
நக்சல்பாரிக் காலத்தில் தருமபுரி பகுதியில்  மக்கள் யுத்தக்
கட்சி, தலித்துகள் மத்தியில் கட்சி கட்டுதலில் பெருவெற்றி
பெற்றது.
**              

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக