எம்ஜியார்-மோகன்தாஸ்-வால்டர் தேவாரம் ஆகிய மூவரின்
பாசிச ஆட்சி நடந்து கொண்டிருந்த காலம் (1977-1985).
திருப்பரங்குன்றத்தில் வக்கீல் ஐயாத்துரையை போலிஸ் அடித்துத்
துவைக்கிறது. திருப்பத்தூரில் நக்சல்பாரிப் புரட்சியாளர்
தோழர் கண்ணாமணியை (CPMகாரன் காட்டிக் கொடுத்ததால்)
போலிஸ் பிடித்துக் கொன்று விடுகிறது.
**
இந்தக் கொடூரத்தைக் கண்டித்து ஒரு அறிக்கையைத் தயார் செய்து
அச்சிட்டுக் கொடுக்கும்படி கட்சி கட்டளை இடுகிறது. இன்றுபோல் இணையதள வசதியெல்லாம் அன்று கிடையாது. நூலகத்திற்குச்
சென்று பல்வேறு நாளிதழ்களைப் படித்து, தகவல்கள் திரட்டி,
ஓர் அறிக்கையைத் தயாரித்து விட்டேன். ஒன்றுக்கு எட்டு (1/8 size,
back and back, 1000 copies) மேற்கு மாம்பலம் அமுதசுரபி அச்சகத்தில்
கொடுத்து கம்போசிங் ஆகி விட்டது. பிரிண்ட் ஆகுமுன் அச்சக
மானேஜர் அறிக்கையைப் படித்து அதிர்ச்சி அடைந்து பிரிண்டிங்கை
நிறுத்தி விட்டார். என்னைக் கூப்பிட்டுத் தகவல் சொன்னார்கள்.
**
அன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் எந்த அச்சகமும் அச்சடித்து
தரவில்லை. பல இடங்களில் அலைந்தும் எப்பயனும் இல்லை.
அப்போது என்னிடம் ஒரு சைக்ளோஸ்டைல் கருவி
இருந்தது. (கையால் இயக்குகிற சிறிய அளவிலானது)
எங்கள் தொழிற்சங்க அச்சுப் பணிகளுக்காக எங்கள் மாநிலச்
செயலர் என்னிடம் கொடுத்திருந்த கருவி அது. கடைசியில்
ஸ்டென்சில் பேப்பர் வாங்கி, கட் பண்ணி, அந்த அறிக்கையை
அச்சிட்டு கட்சியிடம் கொடுத்தேன்.
**
இந்த அறிக்கை தயாரிப்பு விஷயத்தில், initiatorஉம் நான்தான்.
ultimate authorityயும் நான்தான். எவ்வித உரையாடலும்
யாருடனும் சாத்தியம் இல்லை. என் அறிக்கையில் தகவல்
பிழைகளோ கருத்துப் பிழைகளோ இருந்திருந்தாலும்
அதைத் திருத்த நாதி கிடையாது. அடக்குமுறைக்கு நடுவே
செயல்படும்போது, உரையாடல் என்பதற்கு சாத்தியமே
கிடையாது.
**
இது ஒரு மிகச்சிறிய உதாரணம் மட்டுமே. இதைவிடத்
தீவிரமான விஷயங்களை என்னைப் போல, அவரவர்கள்
தாங்களே ultimate authorityஆக இருந்து செய்து இருக்கிறார்கள்.
**
அடக்குமுறைக்கு நடுவில் செயல்படுவது, ரகசியக் கட்சி
அல்லது அரை-ரகசியக் கட்சி போன்ற அமைப்புகளில்
செயல்படும்போது உரையாடலுக்கு சாத்தியம் இல்லாமல்
போகிறது. இதுதான் புறநிலை யதார்த்தம் (objective reality)
**
இன்று 2010இல் அல்லது 2015இல், வாட்சப், ஆண்ட்ராய்ட்
மொபைல், Facebook வசதிகளுடன், வெளிப்படையான
(open party) ஒரு கட்சியில், அதுவும் ஒரு போலிக் கம்யூனிஸ்ட்
கட்சியில் இருந்து கொண்டு ஒருவர் ஒரு பகுதியில்
மேற்கொண்ட நலப்பணி (welfare activity) அனுபவங்களில்
இருந்து கட்சி கட்டுவதில் படிப்பினைகள் என்று கூறுவதை
ஏற்க முடியாது. இதெல்லாம் குட்டி முதலாளித்துவ
விடலைகள் தங்கள் சொந்த அகநிலை விருப்பத்தை
மகத்தான ஆய்வு போலக் கூறுவது சரியல்ல;
நியாயம் அல்ல. இது எந்நாளும் ஏற்க இயலாத ஒன்று.
**
There are many constraints in an UG party which are inherent in it.
They are not imposed from outside by the leadership.
The party was not designed so. The circumstances force the party
to be tight.
மக்கள் யுத்தக்குழுவில் இருந்து விலகிய பின்னர் பேரா
அ மார்க்ஸ் பின்னவீனத்துவாதி ஆனார். அப்போது அவர்
மா-லெ கட்சிகளின் கட்சி கட்டுதல், இயங்குதல் குறித்து
பல அவதூறுகளைக் கூறினார். அதைத்தான் தாங்கள்
தற்போது மீண்டும் கூற முற்படுகிறீர்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக