திங்கள், 12 அக்டோபர், 2015

ரோம் நகரம் எரிந்தபோது பிடில் வாசித்த நீரோக்கள்!
தமிழக இடதுசாரிகள் இந்துத்துவ இடதுசாரிகளே!
-----------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
-------------------------------------------------------------------------------------     
தமிழக இடதுசாரி எழுத்தாளர்கள் அமைப்பு ரீதியாகத் 
திரண்டு வலுவான அமைப்பு பலம் கொண்டவர்கள்.
கலை இலக்கியப் பெருமன்றம் என்பது கம்யூனிஸ்ட் 
(CPI) கட்சியின் எழுத்தாளர்கள் அமைப்பு. தமுஎகச என்பது 
மார்க்சிஸ்ட் (CPM) கட்சியின் எழுத்தாளர்கள் அமைப்பு.
(தமுஎகச = தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் 
கலைஞர்கள் சங்கம்)

மாட்டுக்கறி, தலித் நிர்வாணம், கல்புர்கி படுகொலை 
என்று ஒரு சமூகப் பதட்டம் நிலவுவதைக் கண்டித்து 
நாடு முழுவதும் சாகித்ய அகாடமி விருது பெற்ற 
எழுத்தாளர்கள் தங்கள் விருதுகளைத் திருப்பிக் 
கொடுத்து வருகிறார்கள்.

ஆனால், தமிழ்நாட்டிலோ மயான அமைதி நிலவுகிறது.
எந்த ஒரு இடதுசாரி எழுத்தாளரும் இதுவரை தாங்கள் 
பெற்ற விருதைத் திருப்பிக் கொடுக்கவில்லை.

நாடே கொந்தளிக்கும்போது, தமிழ்நாட்டின் போலி 
இடதுசாரி எழுத்தாளர்கள் மோடிக்கு எதிராக ஒரு சிறு 
துரும்பைக்கூடத் தூக்கவில்லை.  ரோம் பற்றி 
எரிந்தபோது பிடில் வாசித்த நீரோ மன்னனைப் போல 
இந்தப் போலிகள் மௌன விரதம் இருந்து வருகிறார்கள்.

எனவே, இவர்களை இந்துத்துவ இடதுசாரிகள் என்று 
அழைப்பது மிகவும் சரியே.

தமிழ்ச் சமூகத்தின் பொதுவெளியில், முதன் முதலாக 
"இந்துத்துவ இடதுசாரிகள்" என்ற புதியதொரு 
சொல்லாட்சியை  மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
வழங்குகிறது.CPI,CPM போலிக் கம்யூனிஸ்ட்களையும் 
அவர்களின் எழுத்தாளர் அமைப்புகளையும் இந்தச் 
சொல்லாட்சி குறிக்கும்.

இந்துத்துவ இடதுசாரிகளை முறியடிப்போம்!
************************************************************         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக