மனநோய் பிடித்த தமிழ்ச் சமூகம்!
தனிமனிதக் கொலைக்குத் தனி மனிதனே பொறுப்பு!
அதற்கு மதம் பொறுப்பாகாது!
(சுவாதி கொலை சார்ந்த கருத்துகள்--அறிவியல் பார்வை!
-------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-------------------------------------------------------------------------------------------------
மொத்தத் தமிழ்ச் சமூகமும் மனநோய்ச் சமூகம்
என்பதை இளம்பெண் சுவாதி கொலைக்குப்
பிறகான நிகழ்வுகள் நிரூபித்துள்ளன. குறிப்பாக
குட்டி முதலாளித்துவ அற்பர்கள் கருத்துத் தளத்தையே
ஆக்கிரமித்துக் கொண்டு அருவருக்கத் தக்கதும்
பிற்போக்கானதுமான நச்சுக் கருத்துக்களை
முன்வைத்தார்கள்.
கொலை என்பது ஒரு குற்றச் செயல். எந்த அரசு
அதிகாரத்திலும் இல்லாத, சராசரிக் குடிமக்களில்
ஒருவரான ஒரு இளம்பெண்ணைக் கொலை
செய்வது ஒடுக்கப்பட்ட வேண்டிய ஒரு குற்றச் செயல்.
குற்ற மனம் உடையவர்களே இப்படிப்பட்ட ஒரு
கொடூரத்தைச் முடியும். ஒரு இந்துவும் கொலை
செய்வான்; ஒரு கிறிஸ்தவனும் கொலை செய்வான்;
ஒரு முஸ்லிமும் கொலை செய்வான். குற்ற மனம்
உடைய எவனும் கொலை செய்வான்.
சுவாதி கொலை ஒரு அரசியல்கொலை அல்ல.
(Not an assassination). அது ஒரு தனிமனிதக் கொலை.
தனிமனிதக் கொலைகளில் மதத்தைக் குற்றவாளி
ஆக்குவது தவறு.
அண்மையில் கேரளத்தில் ஜிஷா என்ற பெண்ணைக்
கற்பழித்து கொடூரமாகக் கொலை செய்த ஒருவனை
காவல்துறை பிடித்தது. அவன் கேரளத்தில் பிழைக்க
வந்த ஒரு அசாமிய இளைஞன். அவன் ஒரு முஸ்லிம்.
அவன் பெயர் எல்லா ஏடுகளிலும் ஊடகங்களிலும்
வந்தது. என்றாலும் அங்கு யாரும் கட்சி கட்டிக்
கொண்டு கொந்தளிக்கவில்லை.
குற்றவாளியைத் தண்டிக்க வேண்டும் என்றே
இசுலாமியர்கள்,இந்துக்கள் உட்பட அனைத்து
மலையாளிகளும் கோரினார்கள். அவர்கள்
ஒரு குற்றச் செயலைக் குற்றச் செயலாகவும்,
குற்றவாளியைக் குற்றவாளியாகவும் மட்டுமே
பார்த்தார்கள். மலையாளச் சமூகம் மனநோய்ச்
சமூகம் அல்ல என்பதே இதன் காரணம்.
ஆனால், தமிழத்தின் ஒட்டு மொத்தக் குட்டி
முதலாளித்துவ அற்பர்களும், சுவாதி கொலை
தொடர்பான தங்களின் வினை, எதிர்வினைகளில்
தாங்கள் மனநலம் குன்றிய சமூக விரோதிகள்
என்பதை நிரூபித்தார்கள்.
சுவாதிக்கு நிகழ்ந்த இந்தக் கொடூரம் நாளைக்கு
யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். பெற்று
வளர்த்துப் படிக்க வைத்து, வாழ வேண்டிய வயதில்
பிணமாய்ப் போன சுவாதி போல நாளை வேறொரு
எந்தப் பெண்ணும் ஆகி விடக் கூடாது. அப்படி
ஆகாமல் இருக்க வேண்டும் என்றால், மொத்தத்
தமிழ்ச் சமூகமும் மனநலத்தைப் பெற வேண்டும்.
கூத்தாடி மகேந்திரன் ஒரு மூடன். அவன்
படித்தவனோ, கல்வி கற்ற அறிஞனோ அல்லன்.
சராசரி ஆள். சராசரி குட்டி முதலாளித்துவ அற்பன்.
அவனால் அவனுடைய அறிவு வளர்ச்சிக்கும்
ஆளுமைக்கும் ஏற்றபடிதான் கருத்துச் சொல்ல முடியும்.
அவனுக்கு எதிர்வினை ஆற்றிய அனைவருமே
அதே தரத்தை உடைய ஆளுமை வளர்ச்சி
குன்றிய குட்டி முதலாளித்துவ அற்பர்களே.
குட்டி முதலாளித்துவம் சமூகத்தின் இயக்கத்துக்குப்
பெரும் தடையாக இருப்பதை இந்த வினைகளும்
எதிர்வினைகளும் உணர்த்தி விட்டன.
தனிமனிதக் கொலைக்குத் தனிமனிதனே
பொறுப்பு! இதற்கு கொலைகாரனின் மதமோ
சாதியோ பொறுப்பல்ல.
ஒரு குற்றச் செயலைக் குற்றமாகப் பார்க்க
முன்வராத எவன் ஒருவனும் மனநோயாளியே!
அவன் குற்றவாளிக்குத் துணை போனவனே!
----------------------------------------------------------------------------------------------
பின்குறிப்பு: இக்கட்டுரையின் கருத்துக்கள்
assassination எனப்படும் அரசியல்கொலைக்குப்
பொருந்தாது.
******************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக