சனி, 2 ஜூலை, 2016

DNB மருத்துவ நுழைவுத் தேர்வு நாளை நடக்கிறது!
பட்ட மேற்படிப்புக்கான (PG) நுழைவுத் தேர்வு!
---------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------------------------------------
MBBS படித்தவர்கள் மேற்படிப்பில் (Post graduate)
MD அல்லது MS படிப்பார்கள். இதற்கான நீட்
நுழைவுத் தேர்வு இவ்வாண்டு டிசம்பரில்
நடைபெற உள்ளது.

இதற்கிடையில், நாளைய தினம் ஞாயிறு அன்று
(03.07.2016) DNB தேர்வு நடக்கிறது. இத்தேர்வை எழுதித்
தேறும் MBBS டாக்டர்கள் MS, MD படிப்பில் சேர்க்கப்
படுவார்கள்.

DNB என்றால் Diplomate of National Board என்று பொருள்.
இந்த  DNB தேர்வுகளை NBE என்ற அமைப்பு நடத்துகிறது.
NBE என்றால் National Board of Examinations  என்று பொருள்.
இந்த அமைப்பு ஒரு சுயேச்சையான அமைப்பு
(autonomous body). மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்
துறையின் கீழ் வரும் அமைப்பு இது.

இப்படி ஒரு நுழைவுத் தேர்வு இருப்பதே, தமிழகத்தில்
உள்ள போலி முற்போக்குகளுக்கும், நுழைவுத்
தேர்வு எதிர்ப்பாளர்களுக்கு தெரியாது. தெரிந்தால்
இதை வைத்துக் காசு பார்ப்பார்கள்.

நாளைய தினம் இரு மாணவர்களுடன் சென்னையில்
உள்ள ஒரு தேர்வு மையத்துக்குச் செல்கிறது
நியூட்டன் அறிவியல் மன்றம்.
****************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக