திங்கள், 5 அக்டோபர், 2015

டிஜிட்டல் இந்தியா பற்றிய விவாதம் 
குழுப்புணர்ச்சி பற்றிய விவாதம் அல்ல!
தமிழச்சி அம்மையாரின் நச்சுக் கதிரியக்கம்!
-----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------------
வெளிநாடுவாழ் தமிழச்சியான திருமதி தமிழச்சி அம்மையார் 
----முகநூலில், தமிழச்சி (Tamizachi)----- அண்மையில் 01.10.2015 அன்று
தமது முகநூல் பதிவில் தமது அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.


"டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஆதரவு அளிக்காதீர்கள்" என்று ஒரு
பதிவை வெளியிட்டு இருக்கிறார். நுனிப்புல் தன்மையோடும்
அரைவேக்காட்டுத் தன்மையோடும் அவரின் கருத்துக்கள் உள்ளன.

மோடியின் அப்பன் வீட்டுத் திட்டம் அல்ல!
-----------------------------------------------------------------
"இணையச் சுதந்திரத்திற்கு எதிராக இந்தியாவிற்குள் மோடி - மார்க் ஸ்கர் 
உருவாக்கிய மோசடி திட்டம்தான் டிஜிட்டல் இந்தியா"  என்கிறார் தமிழச்சி 
தமது பதிவில். இது உண்மை அல்ல. முகநூல் அதிபர் மார்க் சக்கர்பர்க்
தற்போதுதான் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் தமது கவனத்தைச் 
செலுத்துகிறார். 

ஆனால், டிஜிட்டல் இந்தியா என்பது இப்போது உருவாகும் புதிய திட்டம் அல்ல.
இது டாக்டர் மன்மோகன் சிங் காலத்திலேயே உருவான திட்டம். இந்தியா 
முழுவதும் கண்ணாடி  இழை கேபிள்கள் (optical fibre cables) பதித்து,
கிராமப் புறங்களுக்கு பிராட்பேண்ட் சேவை வழங்கும் திட்டமே 
டிஜிட்டல் இந்தியா திட்டம்.

பழைய திட்டங்களுக்குப் புதிய பெயர்!
-------------------------------------------------------------
காங்கிரஸ் ஆட்சியின் பழைய திட்டங்களுக்கு மோடி அரசு 
புதிய பெயர் சூட்டி விடுவதாலேயே, அது மோடி அரசின் திட்டம் 
ஆகி விடாது. NOFN (National Optical Fibre Network) என்ற திட்டம் 
டாக்டர் மன்மோகன் சிங் காலத்தில் கொண்டு வரப்பட்டது. இதை 
தற்போது பாரத்நெட் (BharathNet) என்று பெயர் மாற்ற மோடி அரசு 
உத்தேசித்து உள்ளது. அப்படியானால் அது மோடி அரசின் திட்டம் ஆகி விடுமா?

கிராமப்புறங்களுக்கு பிராட்பேண்ட் சேவை வழங்கிட, டாக்டர் மன்மோகன்சிங் 
காலத்தில் BBNL (Bharat Broadband Network Limited) என்ற ஒரு நிறுவனம் 
உருவாக்கப் பட்டது. டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கான அடித்தளம் 
இது. இது  UPA-II காலக்கட்டத்தில் ஏற்படுத்தப் பட்டது. இதன் தொடர்ச்சியே 
மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம்.

கருத்துக் கபோதிகளை முறியடிப்போம்!
------------------------------------------------------------------
டிஜிட்டல் இந்தியா திட்டம் இந்தியாவின் கிராமப் புறங்களுக்கு 
பிராட்பேண்ட் சேவை வழங்கும் திட்டம். கருத்துக் கபோதிகளே 
இதை எதிர்க்க முடியும். மோடியின் பத்து லட்ச ரூபாய் சட்டையைப் 
பிடித்து உலுக்கி டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நிறைவேற்றுமாறு 
கோருகிற உரிமை ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு.

டிஜிட்டல் இந்தியா பற்றிய விவாதம் குழுப்புணர்ச்சி பற்றிய 
விவாதம் அல்ல. எனவே சிந்தனைக் குள்ளச்சிகள் இதில் 
கருத்துக்கூற இதில் எதுவும் இல்லை.
**************************************************************************************    



  
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக