வியாழன், 8 அக்டோபர், 2015

தா பாண்டியனும் ஜி ராமகிருஷ்ணனும் 
இடதுசாரி எழுத்தாளர்களை வலியுறுத்தி 
விருதுகளைத் திருப்பிக் கொடுக்கச் சொல்வார்களா?
அல்லது மோடியை ஆதரிப்பார்களா?
---------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
--------------------------------------------------------------------------------
1)ஜெயகாந்தன் 2002இல் ஞானபீட விருது பெற்றார்.

2) மிக மோசமான சித்திரப்பாவை என்ற தமது நாவலுக்காக
அகிலன் ஞானபீட விருது பெற்றார். (ஆண்டு 1975)

3) தற்போது ஞானபீட விருதின் பரிசுத்தொகை 
பதினோரு லட்ச ரூபாய்.
4) ஜெயகாந்தன், அகிலன் தவிர வேறு எவரும் தமிழில் 
ஞானபீட விருது பெறவில்லை. இவ்விருவரும் இன்று 
உயிருடன் இல்லை.

5) எனவே, சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் 
எழுத்தாளர்களைப் பற்றிப் பார்ப்போம்.
6) ஈரோடு தமிழன்பன் தமது மோசமான 'கவிதை' நூலான 
"வணக்கம் வள்ளுவ" என்ற கவிதை நூலுக்காக 2004இல் 
சாகித்ய அகாடமி விருது பெற்றார்.    
7) சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் 
சற்றேறக் குறைய ஐம்பது பேர் ஆவர். இவர்களில்  
இறந்துபோன ராஜாஜி, டாக்டர் மு.வ, கல்கி, மீ.ப.சோமு,
பாவேந்தர் பாரதிதாசன், மபொசி,, கண்ணதாசன், 
சு.சமுத்திரம், தி.ஜானகிராமன் உள்ளிட்ட பலரை
விட்டு விட்டு, உயிருடனும் நல்ல நலத்துடனும் 
இருப்போரைக் கணக்கில் கொள்வோம்.

8)இடதுசாரி எழுத்தாளர்களாக அறியப் படுபவர்கள்:
----------------------------------------------------------------------------------  
பொன்னீலன் (1994இல் விருது)
பிரபஞ்சன் (1995இல் விருது)  
மேலாண்மை பொன்னுச்சாமி (2008இல் விருது)
சு வெங்கடேசன் (2011இல் விருது)
டி செல்வராஜ் (2012இல் விருது)
பூமணி (2014இல் விருது)
ஆகிய மேற்கூறிய ஆறு பேரும் இடதுசாரிகள்.

9) மேலும் மு மேத்தா, பெண் எழுத்தாளர் திலகவதி,
நாஞ்சில் நாடன், கி.ராஜநாராயணன், வைரமுத்து 
ஆகியோரும் சாகித்ய அகாடமி விருது பெற்ற, ஆனால் 
இடதுசாரிகளாக அறியப் படாதவர்கள்.
10) பட்டியல் தொடர்கிறது. முழுப்பட்டியலையும் 
தருவதற்காண தேவை இங்கில்லை.

விருதுகளைத் திருப்பிக் கொடுப்பார்களா?
-------------------------------------------------------------------
CPI கட்சியின் கலை இலக்கியப் பெருமன்றத்தின் 
தலைவர்களில் ஒருவரான மூத்த எழுத்தாளர் 
பொன்னீலன் தமது விருதைத் திருப்பிக் கொடுப்பாரா?
மேலாண்மை பொன்னுச்சாமி அவரைப் பின்பற்றுவாரா?

CPM கட்சியின்  தமுஎகச சார்பில் செயல்படும் 
சு வெங்கடேசன் அண்மையில் பெற்ற தமது விருதைத் 
திருப்பிக் கொடுப்பாரா?

வெக்கையை எழுதிய பூமணி இன்று இந்தியா முழுவதும் 
நிலவும் வெக்கையை உணர்ந்து தமது விருதைத் 
திருப்பிக் கொடுப்பாரா?

இந்த இடதுசாரி எழுத்தாளர்களைத் தங்கள் விருதுகளைத் 
திருப்பிக் கொடுக்கச் சொல்லி, CPI-CPM தலைவர்கள் 
முத்தரசன், தா பாண்டியன், ஜி ராமகிருஷ்ணன் ஆகியோர் 
வற்புறுத்துவார்களா? மோடி அரசுக்கு எதிர்ப்பைத் 
தெரிவிப்பார்களா? நாடே பதிலை எதிர்பார்க்கிறது.
*********************************************************
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக