அமெரிக்கா, ஜப்பான், வியட்நாம் உள்ளிட்ட 12 நாடுகளின்
TPP ஒப்பந்தம் கையெழுத்தானது!
கம்யூனிச வியட்நாம் முதலாளிய அமெரிக்காவுடன்
மீண்டும் மீண்டும் ஒப்பந்தம்!
--------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
---------------------------------------------------------------------------------------
இணைக்கப்பட்ட உலக வரைபடத்தைப் பாருங்கள்.
அதில் பசிபிக் பிராந்திய நாடுகள் (Pacific Rim) நீல நிறத்தில்
காட்டப் பட்டுள்ளன. இதில் இந்தியா கிடையாது என்பது
அனைவரும் அறிந்ததே.
பசிபிக் வளைய நாடுகள் மிகப் பல. அவற்றில் 12 நாடுகள்
மட்டும் அக்டோபர் 5ஆம் நாளன்று (05.10.2015) ஓர் தடையற்ற
வர்த்தக ஒப்பந்தத்தில் (free trade agreement) இணைந்துள்ளன.
இது TPP ஒப்பந்தம் எனப்படுகிறது.(Trans Pacific Partnership)
இந்த TPP ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள்
-------------------------------------------------------------------------------
1) அமெரிக்கா 2) ஜப்பான் 3) ஆஸ்திரேலியா 4) மலேசியா
5) நியூசிலாந்து 6) மெக்சிகோ 7) வியட்நாம் 8)சிங்கப்பூர்
9) கனடா 10) புரூனை 11) பெரு 12) சிலி.
கம்யூனிஸ்ட் நாடும் முதலாளிய நாடும் ஒப்பந்தம்

கம்யூனிஸ்ட் நாடான வியட்நாம் ஏற்கனவே அமெரிக்காவுடன்
பல வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ளது.
அணுசக்திக்கான 123 ஒப்பந்தமும் அமெரிக்காவுடன்
செய்து கொண்டது. தற்போது TPPயிலும் வியட்நாம்
இணைந்துள்ளது.
கம்யூனிச-முதலாளித்துவ ஒற்றுமைக்கு ஜிந்தாபாத்
என்கிறது வியட்நாம்!
ரகசிய ஒப்பந்தம்! ஒப்பந்த ஆவணங்கள் வெளியாகவில்லை!
-----------------------------------------------------------------------------------------------
இது அமெரிக்க கார்ப்பொரேட் நிறுவனங்களின் நலம்
பேணும் ஒப்பந்தம். இதில் இணைந்த 12 நாடுகளிலும்
சேர்ந்து தோராயமாக 70 கோடி மக்கள் உள்ளனர்.
70 கோடி என்பது உலக மக்கள்தொகையில் 10 சதம்.
(உலக மக்கள் தொகையானது 2015இல் 7.3 பில்லியன்;
அதாவது 730 கோடி). எனவே வர்த்தக ரீதியாக 70 கோடி
மக்களைக் கொண்ட சந்தை அமெரிக்காவுக்குக்
கிடைத்து விடுகிறது. இந்த ஒப்பந்த ஆவணங்கள்
இன்னும் உலகத்தின் பார்வைக்கு வெளியிடப் படவில்லை.
இணைய உரிமைகள் (DIGITAL RIGHTS) இந்த ஒப்பந்தத்தால்
பறிபோகும் என்கிறார்கள் இதன் விமர்சகர்கள். அமெரிக்க
மருந்துக் கம்பெனிகளின் நலம் இதில் முக்கியம்
பெற்றுள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன. அறிவுசார்
சொத்துரிமை (Intelectual Property Rights) குறித்து இந்த
ஒப்பந்தம் தீர்க்கமான முடிவுகளை எடுத்துள்ளது என்று
சில தகவல்கள் கூறுகின்றன. இணையம் சார்ந்த
கருத்துரிமை கடிவாளம் இடப் படுகிறது என்பது
கவலைக்குரியது.
*********************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக