சனி, 3 அக்டோபர், 2015

அறிவியல் பரவாதபோது அறியாமை ஆட்சி செய்யும்!
கிரானைட் கொள்ளைக் கயவர்களின் நரபலி தொடரும்!
முக்காடு போடாத பெண் குழந்தையை தகப்பனே கொல்வான்!
----------------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டின் கிரானைட் கொள்ளையர்கள் நரபலி கொடுத்த செய்தி 
வெளிவந்துள்ளது. கிரானைட் கொள்ளையை விட, நரபலி கொடுத்தது 
மிகவும் கொடுமையான குற்றம்.

கடைந்தெடுத்த பிற்போக்குத்தனம் செல்வாக்காக இருக்கும் 
மாநிலங்களில் ஒன்று உத்தரப் பிரதேசம். இங்கு, உணவு அருந்தும்
போது, தன்னுடைய நான்கு வயதுப் பெண் குழந்தை, துப்பட்டாவால் 
தலையை மூடவில்லை என்பதால் ஆத்திரம் கொண்ட ஒரு 
தகப்பன், அந்தக் குழந்தையின் தலையைத்  தரையில் மோதி 
கொடூரமாகக் கொன்று இருக்கிறான்.      

உ.பி.யின் பெரைலி நகருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் 
காந்தி ஜெயந்தி அன்று (02.10.2015) இந்தக் கொடிய நிகழ்வு
நடைபெற்று உள்ளது. பெற்ற குழந்தையைக் கொன்ற தகப்பன் 
ஜாபர் ஹுசேன் கைது செய்யப் பட்டுள்ளான்.

பெண்கள் பிஞ்சுக் குழந்தைகளாக இருந்தாலும் கூட,
தலையை மூடி முக்காடு போட்டுக் கொண்டே இருக்க 
வேண்டும், எந்நேரமும் பர்தா அணிய வேண்டும் என்னும் 
மதக் கட்டளைகளை வெறியோடு பின்பற்றும் ஜாபர் ஹுசேன் 
போன்றவர்களின் மதவெறி ஒரு பிஞ்சுக் குழந்தையைக் 
காவு கொண்டுள்ளது.

இந்தியா காட்டு மிராண்டிகளின் நாடு, வளர்ச்சியில் ஆயிரம்
ஆண்டுகள் பின்தங்கி இருக்கும் நாடு என்ற உணர்வை 
இச்செய்திகள் உறுதிப் படுத்துகின்றன.

அறிவியல் பரவாத வரை அறியாமையும் வெறியுமே ஆட்சி 
செய்யும். இதனால்தான் அறிவியல் பரப்பும் பணி இந்தியாவில் 
முன்னுரிமை பெறுகிறது.

இந்த ஆண்டு அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டின் வழங்கிய 
பொதுச் சார்பியல் கோட்பாட்டின் நூற்றாண்டு. 1915இல் 
ஐன்ஸ்டின் இக்கோட்பாட்டை முன்மொழிந்தார். இன்று 
2015இல் பொதுச் சார்பியல் கோட்பாடு வெளிவந்து 
நூறு ஆண்டுகள் ஆகி விட்டன.

இதைத் தொடர்ந்து, உலகெங்கும், குறிப்பாக அமெரிக்க 
ஐரோப்பிய நாடுகளில் பொதுச் சார்பியல் கோட்பாடு 
(General Theory of Relativity) குறித்த அறிவியல் விவாதங்கள் 
தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஊடகங்களிலும்  
பத்திரிகைகளிலும் இது குறித்த விவாதங்களும் 
கட்டுரைகளும் பெருமளவில் காணப்படுகின்றன.

ஆனால், தமிழ்நாட்டிலோ நடிகர் சங்கத் தேர்தலை 
விவாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நச்சுச் சூழலில்,
அறிவியலைப் பரப்புவது என்பது மலைக்க வைக்கும் 
பணியாக இருக்கிறது.
**********************************************************************

          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக