பெருமாள் முருகன் விருதைத் திருப்பிக் கொடுப்பாரா?
மோடி அரசின் முகத்தில் கரியைப் பூசுவாரா?
இடதுசாரி எழுத்தாளர்கள் பொன்னீலன் வெங்கடேசன் நிலை?
-------------------------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
----------------------------------------------------------------------------------------------------------
இந்தியா கொந்தளித்துக் கொண்டு இருக்கிறது. மோடியின்
ஆட்சியில் மாட்டுக்கறி உண்ண முடியவில்லை. இதைக்
கண்டித்து அறச்சீற்றத்துடன் பொங்கி எழுகிறார்கள்
எழுத்தாளர்கள். இவ்வாறு பொங்கி எழுபவர்கள் யாரும்
சாதாரண எழுத்தாளர்கள் அல்லர். சாகித்ய அகாடமியின்
விருதுகளைப் பெற்ற தலைசிறந்த எழுத்தாளர்கள்!
1) இன்று உருது எழுத்தாளர் ரகுமான் அப்பாஸ் ( மராட்டிய மாநில
சாகித்ய அகாடமி 2011ஆம் ஆண்டிற்கான விருது பெற்றவர்)
தமது விருதைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.
2) இதற்கு முன்பு, மூத்த பெண் எழுத்தாளர் நயன்தார சகல்
தமக்கு அளிக்கப்பட விருதைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.
இவர் ஆங்கில எழுத்தாளர். நேருவின் தங்கை விஜயலட்சுமி
பண்டிட்டின் மகள் ஆவார். இவர் 1986ஆம் ஆண்டிற்கான சாகித்ய
அகாடமி விருது பெற்றவர்.
3) இவரைத் தொடர்ந்து இந்திக் கவிஞர் அசோக் வாஜ்பேயி
விருதைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.1994ஆம் ஆண்டிற்கான
சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
4) மேலும், சிறுகதை எழுத்தாளரும் இந்திக் கவிஞரும் ஆகிய
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த உதய் பிரகாஷ், தமது விருதைத்
திருப்பிக் கொடுத்துள்ளார். இவர் 2010ஆம் ஆண்டிற்கான
சாகித்ய அகாடமி விருது பெற்றவர்.
5) கர்நாடகத்தில், ஆறு கன்னட எழுத்தாளர்கள், கர்நாடக அரசு
வழங்கிய இலக்கிய விருதுகளை (அரளு சாகித்ய விருது)
திருப்பிக் கொடுத்துள்ளனர். மூத்த எழுத்தாளர் கல்புர்கியைப்
படுகொலை செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து
விசாரணை செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்தைக் கண்டித்து
இவர்கள் தங்களின் விருதுகளைத் திருப்பிக் கொடுத்து
உள்ளனர்.
தமிழகமே, உன் பங்கு என்ன?
--------------------------------------------------
இந்திய வரலாறு இதுவரை கண்டிராத அளவு, எழுத்தாளர்கள்
மோடி அரசுக்கு எதிராகத் திரண்டுள்ளனர். வெற்று
அறிக்கைகள் விடாமல், வலுவான முறையில் மோடி அரசுக்கு
நெருக்கடி கொடுக்கின்றனர்.
இச்சூழலில், தமிழக எழுத்தாளர்களின் பங்கு என்ன என்று
அறிய எட்டுக் கோடித் தமிழர்களும் காத்து இருக்கின்றனர்.
அது மட்டுமல்ல, பிற மாநில எழுத்தாளர்களும், தமிழ்
எழுத்தாளர்களின் பங்களிப்பை எதிர்நோக்கிக் காத்து
இருக்கிறார்கள்.
பெருமாள் முருகன், பொன்னீலன், சு வெங்கடேசன் நிலை!
---------------------------------------------------------------------------------------------
பின்நவீனத்துவ எழுத்தாளர் பெருமாள் முருகன்
அண்மையில்தான் உயர்ந்த இலக்கிய விருதான
சமன்வே பாஷா சம்மன் ('Samanvay Bhasha Samman') விருதுக்கு
அறிவிக்கப்பட்டு இருக்கிறார். கலை இலக்கியப் பெருமன்றத்தைச்
சேர்ந்த பொன்னீலன் (CPI), தமுஎகசவைச் சேர்ந்த வெங்கடேசன்
ஆகியோர் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள்.
இவர்களும் பிற இந்திய எழுத்தாளர்களைப் போல, தாங்கள்
பெற்ற விருதுகளைத் திருப்பிக் கொடுத்து, மோடி அரசின்
முகத்தில் கரியைப் பூச வேண்டும் என்று இந்த நாடே
எதிர்பார்க்கிறது.
செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம். செய்யாவிட்டால்
இவர்கள் கேவலமான போலிகள் என்ற உண்மை
எல்லோருக்கும் தெரிந்து விடும்.
*************************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக