சனி, 2 மே, 2015

ஒரே ஒரு தலித்தைக் காட்ட முடியுமா, உங்களால்?
-----------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
---------------------------------------------------------------------------------------
1) மார்க்சிஸ்ட் கட்சியின் (CPM) அகில இந்திய மாநாடு 
அண்மையில் நடந்து முடிந்தது. புதிய நிர்வாகிகள் 
தேர்ந்து எடுக்கப் பட்டார்கள். புதிய பொதுச் செயலாளர் 
சீத்தாராம் எச்சூரிக்கு வாழ்த்துக்கள்.
2) சற்றேறக் குறைய 90 பேர் மத்தியக் கமிட்டி 
உறுப்பினர்களாகத் தேர்ந்து எடுக்கப் பட்டு 
இருக்கிறார்கள். மத்தியக் கமிட்டி என்பதுதான் 
மார்க்சிஸ்ட் கட்சியில் மிக உயர்ந்த அதிகாரம் உள்ள 
அமைப்பு. 
**
3) இந்த 95 பேரில் எவரேனும் தலித்துகள் இருக்கிறார்களா 
என்ற செய்தியாளரின் கேள்விக்கு இல்லை என்றுதான் 
பதிலளிக்க முடிந்தது பிரகாஷ் காரத் அவர்களால்.
4) அய்யா, மார்க்சிஸ்ட் கட்சியின் கன  தனவான்களே,
உங்கள் மத்தியக் கமிட்டியில், அதாவது தலைமைப் 
பீடத்தில் ஒரே ஒரு தலித் கூட இல்லையே! இருந்தால் 
காட்டுங்கள்.
**
5) தலித் மீது தீண்டாமை ஏன்? இப்படி உங்கள் கட்சி 
இருந்தால், உங்களால் புரட்சி செய்ய முடியுமா?
உங்களை எவனாவது நம்புவானா?
***************************************************************    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக