திங்கள், 18 மே, 2015

கலாச்சாரப் புரட்சி குறித்து மார்க்ஸ் கூறவில்லை,
எனினும் சீனத்தில் கலாச்சாரப் புரட்சியை நடத்தினார் 
மாவோ. மார்க்ஸ்-எங்கல்ஸ் போதனைக்குள் மட்டும் 
முடங்கிக் கிடப்பதல்ல மார்க்சியம் என்று நிரூபித்தார்!
---------------------------------------------------------------------------------------------   
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
--------------------------------------------------------------------------------------------
மூலதனத்தின் அதிகாரம் மட்டுமே ஒரே அதிகாரம்,
எல்லாவற்றையும் தீர்மானிக்கிற அதிகாரம் என்ற
கருத்து தவறான ஒன்று. 
ஒரு நேரத்தில், ஒரு குறிப்பிட்ட 
வரலாற்று நிகழ்வில், ஒரு சமூக-அரசியல் செயல்பாட்டில் 
ஒரு முரண்பாடு மட்டுமே பிரதானமாக இருக்கும்.
அதன் தீர்வின்போது, அந்தப் பிரதான முரண்பாடு 
மட்டுமே தீர்க்கப் பட்டு இருக்கும். மற்றைய முரண்பாடுகள் 
தீர்க்கப் படாமல் இருந்து கொண்டு இருக்கும்.
**
பிரதான முரண்பாடு தீர்க்கப் பட்டு விட்ட உடனே, 
பிற எல்லா முரண்பாடுகளும் தீர்க்கப் பட்டு விட்டன 
என்று கருதுவதோ, அல்லது தானாகவே தீர்ந்து  விடும் 
(AUTOMATICALLY) என்று கருதுவதோ வறட்டு மார்க்சியம் 
ஆகும். இது  மார்க்சியத்தை சர்வரோக நிவாரணியாகக் 
கருதும் மிகை மதிப்பீடு ஆகும்.
**
சீனத்தில் புரட்சி நடைபெற்று கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சி 
அதிகாரத்தைக் கைப்பற்றிய உடனேயே, சமூகத்தின் 
எல்லா முரண்பாடுகளும் தீர்க்கப் பட்டு விட்டதாக 
மாவோ கருதவில்லை. எனவேதான் அவர் கலாச்சாரப் 
புரட்சியை நடத்தினார். கலாச்சாரப் புரட்சி என்ற கோட்பாடு 
மூல ஆசான்கள் சொல்லாத ஒன்று. புதிய ஜனநாயகப் 
புரட்சி வெற்றி பெற்றதுமே, "எல்லா அதிகாரங்களும் 
களையப் பட்டு விட்டன, எல்லாவிதமான சுரண்டலும் 
ஒழிக்கப் பட்டு விட்டது" என்று மாவோ கருதி 
இருந்தால், கலாச்சாரப் புரட்சி நடத்த வேண்டியதன் 
அவசியம் என்ன?         
****************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக