வியாழன், 7 மே, 2015

மதிப்பெண்களுக்கும் அரசுப் பொறியியல் கல்லூரிகளுக்கும்
இடையிலான நேர் விகிதப் பொருத்தம்!
-------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------------------------------- 
வந்து விட்டன ப்ளஸ் டூ மதிப்பெண்கள்.
பலரும் தொடர்பு கொண்டு மதிப்பெண்களைச்
சொன்னார்கள். மிகுதியும் நிறைவைத் தாங்கிய 
தகவல்கள். சில நுண்ணிய ஏமாற்றங்களும் உண்டு.
**
மதிப்பெண்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்று 
சமூகத்தின் அறிஞர்கள் எவ்வளவுதான் சொன்னாலும்,
அவர்கள் சொல்வது பொய் என்று மாணவர்களுக்குத் 
தெரிந்து விடுகிறது.
**
யதார்த்தம் மிகக் குரூரமாகக் கண் முன்னே விரிந்து 
நிற்கிறது. மதிப்பெண்களைப் பார்த்த அடுத்த நொடியிலேயே,
"அண்ணா  பல்கலையில் இடம் கிடைக்காது, அரசுப் பொறியியல் 
கல்லூரியிலும் இடம் கிடைக்காது" என்று தெளிவாகத் 
தெரிந்து விடுகிறது.
**
ஜெயமோகன் தன்னுடைய அஜிதன் சிறுகதையில் அரசுப் 
பள்ளிகளை மிகவும் சிலாகித்து எழுதி இருப்பார். சரிவரப் 
படிக்காத, மதிப்பெண் குறைந்த பிள்ளைகளை எல்லாம் 
அரசுப் பள்ளிகள் தயக்கமின்றிச் சேர்த்துக் கொள்கின்றன 
என்பார் ஜெயமோகன்.
**
ஆனால், அரசுப் பொறியியல் கல்லூரிகளின் நிலை அப்படி அல்ல.
அவை மதிப்பெண் குறைந்த மாணவர்களைச் சேர்ப்பதில்லை.
நல்ல மதிப்பெண்கள் இருந்தால் அல்லாமல், அரசுப் பொறியியல் 
கல்லூரிகளை நினைத்தும் பார்க்க முடியாது.
**
எனவே, மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்குக் கல்வி 
அளிப்பவை தரம் குறைந்த தனியார் சுயநிதிக் கல்லூரிகளே.
தங்களின் சொந்த அனுபவத்தில் இதையெல்லாம் உணர்ந்து 
கொள்ளும் மாணவர்களும் பெற்றோர்களும், "மதிப்பெண்ணில் 
ஒன்றுமே இல்லை" என்னும் சமூகவியல் 'அறிஞர்'களின் 
பொய்க்கூற்றை இகழ்ச்சியுடன்  ஒதுக்குகிறார்கள்.
**
நுழைவுத் தேர்வை ரத்து செய்தது உண்மையில் மாணவர்களுக்கு 
நஷ்டமே. கடும்போட்டி நிலவுகிற இடத்தில், ஒரு RELATIVE MERITஐ 
அறிந்து கொள்ள முடியாமலே போகிறது.
**
எல்லா மாணவர்களையும் நியூட்டன் அறிவியல் மன்றம் 
வாழ்த்துகிறது.
************************************************************* 
             

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக