வியாழன், 14 மே, 2015

ஐரோப்பிய சமூகத்தில் நிலப்பிரபுத்துவம் முற்றாக அழிக்கப் பட்டு,
அதன் சாம்பலில் முதலாளித்துவம் பிறந்தது. அங்குள்ள 
பூர்ஷ்வா வர்க்கம் ஒரு சுதந்திரமான பூர்ஷ்வா வர்க்கம் ஆகும்.
(தரகு முதலாளி அல்ல என்று பொருள்). ஐரோப்பாவில்,
வர்க்கங்கள் அவற்றின் தூய்மையான வடிவத்தில் (PURE FORM)
தோன்றின. இந்தியாவில் நிலப்பிரபுத்துவம் அழிக்கப்பட்டு,
அதன் சாம்பலில் முதலாளித்துவம் தோன்றவில்லை.
எனவே, இங்கு வர்க்கங்கள் அவற்றின் தூய்மையான வடிவில் 
(PURE FORM) தோன்றவில்லை. இதற்குக் காரணம் சாதி ஆகும்.
**
ஒரு சாதிக்குள் பல வர்க்கங்களும், ஒரு வர்க்கத்தில் பல 
சாதியினரும் இருப்பது கண்கூடு. முழுவளர்ச்சி அடைந்த 
தூய்மையான வர்க்கங்கள் இங்கு தோன்றவில்லை என்பதைக் 
கணக்கில் கொண்டுதான் இங்கு மார்க்சியத்தைப் பிரயோகிக்க 
முடியும். மார்க்சியத்தை எந்திரத்தனமாகப் பிரயோகித்த 
CPI, CPM கட்சிகளின் அனுபவத்தில் இருந்து படிப்பினை 
பெறாமல், இங்கு ஒரு அங்குலம் கூட நகர முடியாது.      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக