வியாழன், 14 மே, 2015

மார்க்சியமும் கந்தர் சஷ்டி கவசமும்!
----------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
------------------------------------------------------------------
சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலன்
பாதம் இரண்டில் பன்மணிச் சலங்கை 
கீதம் பாட கிண்கிணி ஆட 
...       .....     ......        ......     .......     ......       .......
மார்க்சியத்தை நன்கு பயின்று விட்டோம் என்று உரிமை கோரும் 
பல குட்டி முதலாளித்துவ அன்பர்கள், தாங்கள் படித்த, புரிந்து 
கொண்ட மார்க்சியத்தை வெளிப்படுத்தும்போது, அதிர்ச்சி 
அடைகிறோம். முருக பக்தர்கள் கந்தர் சஷ்டி கவசத்தை 
ஒப்பிப்பது போல, இவர்கள் மார்க்சியத்தை எந்திரத்தனமாகப் 
புரிந்து கொண்டு ஒப்பிக்கிறார்கள்.
**
ஆனால், மார்க்சியம் என்பது கந்தர் சஷ்டி கவசம் அல்ல.
முந்தைய கட்டுரையில் அடித்தளம்-மேல்கட்டுமானம் என்ற 
வகைமை (category) பற்றிக் குறிப்பிட்டு இருந்தோம். மனித 
வாழ்வில் உள்ள எல்லா விஷயங்களையும் இந்த வகைமைக்குள் 
அடைத்து விட முடியாது.
**
எந்த ஒரு சமூகத்தின் அடித்தளமாகவும் பொருளியல் 
காரணிகள் இருக்கின்றன என்பது உண்மையே. ஆனால்,
இது எல்லா நேரத்திலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் 
உண்மை அல்ல. கணித விதிகளைப் போல, மார்க்சிய 
விதிகள் கறாராக எல்லா இடத்திலும் எல்லா நேரத்திலும் 
பொருந்துபவை அல்ல.
**
அடித்தளம் மேல்கட்டுமானத்தைத் தீர்மானிக்கிறது என்ற 
மார்க்சிய விதி ஒரு UNIVERSAL LAW அல்ல. மேல்கட்டு-
-மானமும்  அடித்தளத்தின் மீது செல்வாக்குச் செலுத்தும்;
தீர்மானிக்கும்.இந்திய சமூகத்தில் மதமும் சாதியும்,
சமூகத்தின் பொருளியலைத் தீர்மானிப்பதில் முக்கிய 
பங்கு உடையனவாய் இருக்கின்றன என்பது கண்கூடு.
**
மொழி என்பது மேல்கட்டுமானம் அல்ல என்று ஸ்டாலின் 
கூறியபோது, உலகம் முழுவதிலும் உள்ள, சஷ்டி கவச 
மார்க்சிஸ்டுகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். 
ஆனால், சொன்னது ஸ்டாலின் என்பதால்,வாயைத் 
தைத்துக் கொண்டார்கள். நூறாண்டு காலம் (1848-1950)
நீடித்த எந்திரத் தனமான புரிதலுக்கு முற்றுப்புள்ளி 
வைத்தார் ஸ்டாலின்.
**
மேற்கோள்வாதிகள், சொற்காமுகர்கள், பாராயணவாதிகள் 
ஆகியோர் இனியாவது மார்க்சியத்தைச் சரியாகப் படித்து,
சரியாகப் புரிந்து கொண்டு, சரியாக நடைமுறைப் படுத்த 
முயல வேண்டும்.   
***************************************************************************  
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக