நடைமுறை என்றால் என்ன? கிலோ என்ன விலை?
--------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
--------------------------------------------------------------------------------------
உலகில் தோன்றிய வேறு எந்தத் தத்துவத்தையும் விட,
மார்க்சியம் "நடைமுறை"க்கு (PRACTICE) மிகுந்த முக்கியத்துவம்
தருகிறது. பேசித் திரிவதற்கு அல்ல மார்க்சியம். ஒரு மாலைப்
பொழுதை ரம்மியம் ஆக்கிக் கொள்வதற்காக உள்ள விஷயம்
அல்ல மார்க்சியம். படித்த மார்க்சியத்தை நடைமுறைப்
படுத்துகிறபோது தான், மார்க்சியத்தையே புரிந்து கொள்ள
முடியும்.
**
மார்க்சியம் பேசும் குட்டி முதலாளித்துவ அன்பர்கள் பலர்
மார்க்சியத்தை நடைமுறைப் படுத்துவதில் எந்த அனுபவமும்
இல்லாத வறட்டு ஆசாமிகள். ஒரு தொழிற் சங்கத்திலோ அல்லது
விவசாய சங்கத்திலோ, வேலை செய்து அனுபவம் பெற்றால்
மட்டுமே, மார்க்சியத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
மார்க்சிய அறிவைப் பெறுவதற்கான முன் நிபந்தனையாக
மார்க்சியப் பிரயோகம் இருக்கிறது. மார்க்சியத்தைச்
சமூகத்தில் பிரயோகம் செய்து பார்க்காதவர்கள், அதாவது,
மார்க்சிய நடைமுறையே இல்லாதவர்கள், மார்க்சியத்தைப்
பற்றிப் பேசும் அருகதை இல்லாதவர்கள்.
-------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக