திங்கள், 18 மே, 2015

தமிழ் ஈழ தேசியத் தலைவர் 
மேதகு பிரபாகரன் அவர்களின் மறைவுக்கும் 
முள்ளி வாய்க்கால் இனப்படுகொலையில் 
உயிரிழந்த ஈழத்தமிழர்களுக்கும் அஞ்சலி!
------------------------------------------------------------------------
மே 17-18, 2015; ஆறாம் ஆண்டு நினைவாஞ்சலி 
--------------------------------------------------------------------------  
முள்ளி வாய்க்கால் இனப்படுகொலையில் உயிரிழந்த 
தமிழ் ஈழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் 
அவர்களுக்கும் ஈழத்தமிழ்ச் சொந்தங்களுக்கும் 
அஞ்சலி செலுத்துவோம்!
விடுதலைப் போர் தொடரட்டும்!
**
வாழ்வைப் போலவே சாவையும் கொண்டாடக் கூடியவர்கள் 
புலிகள். ஈழ விடுதலைப் போரில் உயிர் நீத்த அத்தனை 
தியாகிகளுக்கும் நினைவகம் அமைக்கப் பட்டு, அவர்களை 
மாவீரர்கள் என்று போற்றுவது புலிகளின் மரபு. ஆனால்,
தமிழ்நாட்டில், தேசியத் தலைவரின் பெயரைச் சொல்லிப் 
பிழைப்பு நடத்தும் இழிந்த தலைவர்களும் அவர்களின் 
அமைப்புகளும், தேசியத் தலைவரின் மறைவுக்கு 
அஞ்சலி செலுத்த மறுக்கின்றனர். இதன் மூலம் மறைந்த 
தேசியத் தலைவரை அவமதிக்கிறார்கள்.
**
இந்நிலையில் தேசியத் தலைவரின் மறைவுக்கு அஞ்சலி  
செலுத்துவது, ஈழ விடுதலையை நேசிக்கும் ஒவ்வொருவரின் 
கடமை ஆகும். எனவே மறைந்த தேசியத் தலைவர் 
மேதகு பிரபாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம்.
**
தேசியத் தலைவருக்கு அஞ்சலி  செலுத்தும் நல்வாய்ப்பு 
மே 17 அன்று காலையிலேயே எனக்குக் கிடைத்தது 
கேப்டன் செய்திகள் (CAPTAIN NEWS TV) தொலைக்காட்சியில்,
(காலை 7.45-8.30 மணி) "அச்சில் வந்தவை" நிகழ்ச்சியில் 
பங்கேற்றபோது, தேசியத் தலைவர் அவர்களின் மறைவுக்கு 
அஞ்சலி செலுத்தினேன். தமிழ்நாட்டில் எந்த நாளிதழும் 
எந்தத் தொலைக்காட்சியும் இவ்வாறு அஞ்சலி  செலுத்த 
முன்வராதபோது, இந்த எளியவன் மூலமாக, பார்வையாளர்களான கணிசமான நேயர்களும் அஞ்சலி 
செலுத்த முடிந்தது என்று பலரும் கூறியது எனக்கு 
நிறைவைத் தந்தது.   
**
அன்று மாலை (17.05.2015) மூத்த பத்திரிகையாளர் திரு 
சோதிராமலிங்கம் அவர்கள் நடத்திய தலையங்க விமர்சனம்  
அமர்வில் பங்கேற்று, திரளான ஊடகவியலாளர்கள் 
முன்னிலையில் தேசியத் தலைவருக்கு அஞ்சலி 
செலுத்த முடிந்தது. தோழர் சோதிராமலிங்கம்
அவர்களுக்கு நன்றி!
******************************************************************   
       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக