செவ்வாய், 12 மே, 2015

30 மார்க் எடுத்து, ஜெ. ஃபெயில் என்றார் குன்ஹா!
98 மார்க் எடுத்து, ஜெ. பாஸ் என்கிறார் குமாரசாமி!
----------------------------------------------------------------------------------   
ஒரு வழக்கில் மேல்முறையீடு செய்வது என்பது. ப்ளஸ் டூ 
மாணவன் தன்னுடைய விடைத்தாளை மறுதிருத்தம் 
(REVALUATION) செய்யக் கோருவது போலத்தான். 80 மார்க் 
எடுத்த மாணவனின் விடைத்தாளை மறுதிருத்தம் 
செய்யம்போது, 90 மார்க் கிடைக்கலாம்; அல்லது 70 மார்க் 
கிடைக்கலாம்.
**
ஆனால், 30 மார்க் எடுத்து ஃபெயிலாப் போன, ஒரு மாணவனின் 
விடைத்தாளை மறுதிருத்தம் செய்யும்போது, அவனுக்கு 
98 மார்க் கிடைத்ததைப் போன்றதுதான் ஜெயலலிதாவின் 
மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு.
**
கீழ் நீதிமன்றத் தீர்ப்புக்கும் மேல்முறையீட்டுத் தீர்ப்புக்கும் 
இடையில் ஒரு தர்க்க ரீதியான தொடர்ச்சி (LOGICAL CONTINUITY)
இருக்க வேண்டும். ஆனால் நீதியரசர் குமாரசாமியின் 
தீர்ப்பில் அது இல்லை. கீழ் நீதிமன்றத் தீர்ப்பை முற்றிலுமாகப் 
புறந்தள்ளிவிட்டு, மனம்போன போக்கில் வழங்கப்பட்ட 
(HIGHLY ARBITRARY, RANDOM) தீர்ப்பாகத்தான் அது இருக்கிறது.
**
நீதி வழங்கப்படுவது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு 
முக்கியம், நீதி வழங்கப் பட்டதாகத் தெரிய வேண்டும் என்பதும்.
ஆனால், 120 கோடி மக்களின் கவனத்தை ஈர்த்த இந்த வழக்கில்,
நீதி வழங்கப் பட்டதாகத் தோன்றவில்லை.
******************************************************************       
வின் டி.வி. விவாதத்தில் (11.05.2015 இரவு 7 to 8 மணி)
நியூட்டன் அறிவியல் மன்றம் தெரிவித்த கருத்து.
--------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக