(6) மார்க்சியத்தில் சாதியத்துக்குத் தீர்வு உள்ளதா?
தொடர் கட்டுரை-6; மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-----------------------------------------------------------------------------------------
தேய்ந்து மறையும் கழுதைகளின் கனைப்புச் சத்தங்களும்,
கருத்தை மாற்றிக் கொண்ட காரல் மார்க்சின் கம்பீரமும்!
--------------------------------------------------------------------------------------------
ரயில் பாதைகள் போடுவதன் மூலம் ஏற்படும் தொழில்
வளர்ச்சியால் இந்தியாவில் சாதிகள் ஒழிந்து விடும் என்றும்,
பிரிட்டிஷ் ஆட்சியே இதைச் செய்து சாதியை ஒழித்து விடும்
என்றும் நம்பினார் மார்க்ஸ். இதை எமது கட்டுரைகள் 3 மற்றும்
4இல் குறிப்பிட்டு இருந்தோம்.
**
ஆனால் மார்க்ஸ் நம்பியபடி எதுவும் நடக்கவில்லை.
ஏகாதிபத்தியம் தன்னுடைய அடிமை நாடுகளில்,
சுதந்திரமான தொழில் வளர்ச்சியை அனுமதிப்பதில்லை
என்பது புதிய தரவுகளின் அடிப்படையில் மார்க்சுக்குத்
தெரிய வந்தது. இதனால் தமது முந்தைய கருத்தை
மாற்றிக் கொண்டார் மார்க்ஸ். அதை மூலதனம் நூலில்
எழுதி உள்ளார். (தொகுதி-3, பகுதி-4, அத்தியாயம்-20,
தலைப்பு: வணிக மூலதனம் பற்றிய வரலாற்றுத் தரவுகள்)
**
மார்க்சியம் ஒரு அறிவியல்; அது மதம் அல்ல; மார்க்ஸ்
நபி அல்லர். விவரங்களில் இருந்து உண்மைக்குச் செல்வது
என்பதே மார்க்சிய அணுகுமுறை. ( FROM FACTS WE PROCESS
TO TRUTH. THIS IS THE MARXIAN APPROACH). எனவே, புதிய
தரவுகளின் அடிப்படையில், புதிய முடிவுக்கு மார்க்ஸ்
வந்தது அறிவியல் வழிப்பட்டதே.
**
இதோ, மார்க்ஸ் கூறுகிறார், பாருங்கள்!
--------------------------------------------------------------
"இந்தியாவில் பிரிட்டிஷார் தங்களின் அரசியல் மற்றும்
பொருளாதார நேரடி அதிகாரத்தைச் செலுத்தி, --ஆட்சியாளர்
களாகவும் நிலப் பிரபுக்களாகவும்-- இத்தகைய சிறிய
பொருளாதாரச் சமூகங்களை அழித்தனர். ஆங்கில வணிகம்
இத்தகைய சமூகங்களைத் தன் தீவிரமான செல்வாக்கிற்கு
உட்படுத்தி, அவற்றைக் கிழித்து எறிந்தது."

In India the English lost no time in exercising their direct political and
economic power, as rulers and landlords, to disrupt these small economic
communities.[6]
English commerce exerted a revolutionary influence on these communities
and tore them apart.....
....CAPITAL Vol-III, Part-IV, Chapter-20, Historical facts about
Merchant's capital...........
-------------------------------------------------------------------------------------------------
ஆக, தொழில் வளர்ச்சியை இங்கிலாந்து ஏற்படுத்தும் என்ற
நம்பிக்கைக்கு மாறாக, ஆங்கில ஏகாதிபத்தியம் இந்தியத்
தொழில்களை அழித்தது. வணிக மூலதனமானது தொழில்
மூலதனமாக மாறவே இல்லை.
**
தோழர்கள் மேலே குறிப்பிட்டுள்ள கட்டுரையை முழுமையாகப்
படிக்க வேண்டும். அப்போதுதான் மார்க்சின் கருத்துக்களை
புரிந்து கொள்ள முடியும். மார்க்சின் மூலதனம் என்பது
நர்சரி ரைம் அல்ல. அது தீவிரமான வாசிப்பைக் கோருவது.
**
மேலும் ஆதாரங்கள் அடுத்த கட்டுரையில் வழங்கப் படும்.
அப்போது கனைப்புச் சத்தங்கள் முழுவதுமாக அடங்கி விடும்.
மார்க்ஸ் கம்பீரமானவர், பலவீனமானவர் அல்ல!
******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக