சனி, 2 மே, 2015

திரு ஈஸ்வரன் அவர்களுக்கு,
என் இரண்டாவது கட்டுரையிலேயே தெளிவாகக்
குறிப்பிட்டுள்ளேன். அது பின்வருமாறு;-
--------------------------------------------------------------------------------
புத்த மத நூல்கள் பற்றியோ புத்தரின் தத்துவங்கள் பற்றியோ
மார்க்சும் எங்கல்சும் அறிந்து இருக்கவில்லை. கீழ்த்திசை 
நாடுகளின் அறிவுச் செல்வங்கள் ( TREASURE HOUSE OF 
KNOWLEDGE ) பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. 
கிரேக்கத்தின் தொன்மையான அறிவுச் செல்வங்கள் பற்றி 
அறிந்து, அவற்றில் ஆழ்ந்த புலமை பெற்ற அவர்கள் 
இருவருக்கும், கிரேக்கத்தையும் விடத் தொன்மையான 
கீழ்த்திசை உலகின் தத்துவ ஞானம் மற்றும் மரபு
பற்றி எதுவும் தெரியாது.

லூத்விக் ஃபாயர்பாக் என்ற ஜெர்மானிய அறிஞரின்
பொருள்முதல்வாதத்தை மேம்படுத்தி, அதையே மார்க்சியத்தின் பொருள்முதல்வாதமாக ஆக்கிக் கொண்ட மார்க்சும் எங்கல்சும்
இந்தியாவின் பொருள்முதல்வாத ஞானம் பற்றி
அறிந்து இருக்கவில்லை.
---------------------------------------------------------------------------------------------------------
 இதுதான் சாரம். சிந்து சமவெளி நாகரிகம் பற்றி மார்க்சுக்குத் 
தெரியாது என்று நான் எங்கு குறிப்பிட்டுள்ளேன்? அப்படி 
வாக்கியம் இருந்தால் காட்டவும்.         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக