புதன், 13 மே, 2015

அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட நீதிபதியும் 
32 லட்ச ரூபாய் மோசடி செய்த நீதிபதியும்!
---------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------------------------
1) நீதிபதிகளுக்கு இவ்வளவு தீவிரமான 
பாதுகாப்புக் கவசம் தேவையா?
IMPEACHMENT தான் ஒரே வழியா? 
(நீதிபதி என்பது உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற 
நீதிபதிகளை மட்டும் குறிக்கும்)
**
2) தமிழகத்தைச் சேர்ந்த திரு ராமசாமி, உச்சநீதிமன்ற 
நீதிபதியாக இருந்தவர். இவரது நிதி மோசடி அம்பலப் 
பட்டதால், இவர் மீது IMPEACHMENT தீர்மானம் 
மக்களவையில் மே 1993இல் கொண்டு வரப்பட்டது.
3) ஆனால், மக்களவையில் இத்தீர்மானம் மூன்றில் இரண்டு 
பங்கு பெரும்பான்மை பெற முடியாமல் தோல்வி 
அடைந்தது. காங்கிரஸ் எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் 
பங்கு கொள்ளாமல் புறக்கணித்து, ராமசாமியைக் 
காப்பாற்றினார்.
**
4) அடுத்து, கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சௌமித்ரா சென் 
மீது, மாநிலங்களவையில் IMPEACHMENT தீர்மானம் 2011இல் 
கொண்டு வரப்பட்டது. இவர்  நீதிமன்றக் கணக்கில் டெப்பாசிட் 
செய்ய வேண்டிய பணம் ரூபாய் 32 லட்சத்தைத் தன்  சொந்தக்
கணக்கில் டெப்பாசிட் செய்தவர்.
5) மாநிலங்களவையில் இத்தீர்மானம் வெற்றி பெற்றது.
இதைத் தொடர்ந்து திரு சென் ராஜினாமா செய்தார்.
6) 32 லட்ச ரூபாய் மோசடி செய்ததற்காக, அவர் மீது 
எந்த வழக்கும் தொடரப்படவில்லை. 
**
6) தமிழகத்தைச் சேர்ந்த இன்னொரு நீதிபதி திரு P D தினகரன் 
மிக மோசமான ஊழல் பேர்வழி. IMPEACHMENT தீர்மான முயற்சிகள் 
தொடங்கும் நிலையில் பதவியை  ராஜினாமா செய்தார்.
7) திரு ராமசாமி 1999 நாடாளுமன்றத் தேர்தலில் சிவகாசி 
தொகுதியில், வைகோவை எதிர்த்து அதிமுக வேட்பாளராகப் 
போட்டியிட்டுத் தோல்வி அடைந்தவர் என்பதை வாசகர்களுக்கு 
நினைவு படுத்துகிறேன்.
** 
8) நீதிபதிகள் கடவுள்கள் அல்ல. எனவே, தற்போதைய 
சட்டப் பாதுகாப்பை ரத்து செய்து, ஒரு முதல்நிலை 
அரசு அதிகாரிக்கு ( CLASS I OFFICER) உள்ள அந்தஸ்து 
மட்டுமே வழங்கப்பட வேண்டும். 
****************************************************************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக