அறிவியலும் தொழில்நுட்பமும்
-----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------
அறிவியல் என்பது தொடர்ந்து வளர்ந்து கொண்டே
இருக்கிறது. அறிவியல் வளர வளர, அதைத்
தொழில்நுட்பமாக (technology) மாற்றும் முயற்சிகளும்
தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அறிவியல்
கோட்பாடுகளைத் தொழில் நுட்பமாக்கும் முயற்சிகள்
சமூகத்தின் பண்ட உற்பத்தியோடு தொடர்பு உடையவை.
**
எல்லா அறிவியல் கோட்பாடுகளும் தொழில்நுட்பமாக
மாற்றப்பட்டு விடுவதில்லை. ஒரு கோட்பாடு
தொழில்நுட்பமாக மாற்றப்பட வேண்டுமா கூடாதா
என்பதைப் பின்வரும் காரணிகள் தீர்மானிக்கும்.
1. பண்ட உற்பத்தியில் அந்தத் தொழில்நுட்பத்திற்கான
தேவை 2. ஆகும் செலவுகள் 3. லாபம் வரும் என்ற
உத்தரவாதம்.
**
ஆனால், அறிவியல் வளர்ச்சி என்பது இப்படி அல்ல.
அது சமூகத்தின் பண்ட உற்பத்தியின் மேற்கூறிய விதிகளால்
பெரிதும் தளைப் படாது.
**
தூண்டப்பட்டு உமிழ்தல் (stimulated emission) என்ற கோட்பாட்டை
ஐன்ஸ்டின் கண்டுபிடித்தார். சில பத்தாண்டுகளுக்குப்
பின்னர்தான் இது லேசர் என்ற தொழில்நுட்பமாக ஆக்கப்
பட்டது. எனினும் இந்த லேசர் என்னும் தொழில்நுட்பத்துக்குச்
சந்தையில் இடமே இல்லை. எனவே, லேசர் என்பது
பயன்பாட்டை நோகிக் காத்திருக்கும் கண்டுபிடிப்பு
(An invention in search of application) என்று வர்ணிக்கப் பட்டது.
**
ஆனால் இன்று லேசர் மிகப் பரவலான பயன்பாட்டுக்கு
வந்து விட்டது. வலி இல்லாமல் கண் அறுவை சிகிச்சை
செய்வது முதல், அழகு நிலையங்களில் பெண்களின்
அல்குல் ரோமங்களை நீக்குதல் வரை எல்லையற்ற
பயன்பாட்டுக்கு லேசர் வந்து விட்டது.
**
அறிவியல் என்றால் என்ன? தொழில்நுட்பம் என்றால்
என்ன? இரண்டுக்கும் இடையிலான உறவும் வேறுபாடும்
என்னென்ன? இக்கேள்விகளுக்கான ஓர் எளிய விடை இது.
*****************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக