சனி, 16 மே, 2015

மார்க்சியப் பாராயணவாதிகளும்,  
எல்லாத் தத்துவங்களையும் இரண்டு பிரிவுக்குள் 
அடக்கி விடலாம் என்னும் எந்திரத்தனமான புரிதலும்! 
----------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
---------------------------------------------------------------------------------------
தத்துவம் (PHILOSOPHY) என்பது ஒன்றல்ல, இரண்டல்ல.
ஆயிரக் கணக்கில் தத்துவங்கள் உள்ளன. என்றாலும்,
ஒரு பரந்துபட்ட அளவில் (in a broad sense) அவற்றை 
இரண்டு பிரிவுகளாக வகைப் படுத்தலாம்.
1. பொருள்முதல்வாதம் (MATERIALISM)
2. கருத்துமுதல்வாதம் (IDEALISM)
**
கடவுள்தான் உலகைப் படைத்தார் என்று சொல்லும் 
எல்லாத் தத்துவங்களும் கருத்துமுதல்வாதத்தில் 
அடங்கும். இந்த உலகை யாரும் படைக்கவில்லை;
அது நிரந்தரமாக இருக்கிறது என்று சொல்லும் 
தத்துவங்கள் யாவும் பொருள்முதல்வாதத்தில் அடங்கும்.
**
இவ்வாறு வகைப்படுத்துவது ஐரோப்பிய மரபில் இருந்தது.
அதைத் தொடர்ந்து, மார்க்சிய மூல ஆசான் எங்கல்ஸ் 
தத்துவங்களை இவ்வாறு இருபெரும் பிரிவுகளாக 
வகைப்படுத்தி, இந்தப் பிரிவினையை உறுதி செய்தார்.
**
என்றாலும்,
இம்மானுவேல் கான்ட் என்பவரின் தத்துவத்தையும் 
(Kantian philosophy) டேவிட் ஹ்யூம் (David Hume) என்பவரின் 
தத்துவத்தையும் பொருள்முதல்வாதம் என்றோ 
கருத்துமுதல்வாதம் என்றோ வகைப்படுத்தி விட முடியாது.            
ஆக, இந்த வகைமைக்கு விதிவிலக்குகளும் உண்டு.
**
எனவே, தத்துவங்களில் இரண்டு வகை மட்டுமே உண்டு 
என்று விஷயங்களை எந்திரத்தனமாகப் புரிந்து கொள்ளக் 
கூடாது. என்றாலும், அவ்வாறு புரிந்து கொள்வது 
மார்க்சியப் பாராயணவாதிகளின் பிறப்புரிமை.
**
இதோ எங்கல்ஸ் கூறுகிறார்:
------------------------------------------------
"மேலும், ஏற்கனவே கூறியவர்கள் போக, இவர்களில் இருந்து 
வேறுபட்ட தத்துவஞானிகளும் இருக்கிறார்கள். அவர்களுடன் 
சமீபத்தில் சேர்ந்தவர்கள் ஹ்யூம்,கான்ட் ஆகிய இருவரும்.
இவர்கள் இருவரும் தத்துவ ஞானத்தின் வளர்ச்சியில் மிகவும் 
முக்கியமான பங்காற்றி இருக்கிறார்கள்". 
(பார்க்க: லுத்விக் பாயர்பாக் மற்றும் மூலச் சிறப்புள்ள 
ஜெர்மன் தத்துவஞானம், பகுதி-2, பொருள்முதல்வாதம்) 
**
ஆங்கில மூலம் கீழே காண்க. வாசகர்கள் மேற்கூறிய முழுக்
கட்டுரையையும் படிப்பதன் மூலமே துல்லியமான புரிதலைப் 
பெற முடியும்.
In addition, there is yet a set of different philosophers — those who question the possibility of any cognition, or at least of an exhaustive cognition, of the world. To them, among the more modern ones, belong Hume and Kant, and they played a very important role in philosophical development.
******************************************************************************  
பின்குறிப்பு: பரந்துபட்ட அளவில் (BROAD SENSE) என்றால் என்ன?
ஆடை, ரவிக்கை என்னும் இந்த இரண்டு சொற்களையும் கருதுக.
ஆடை என்பது BROAD SENSE. அதாவது, ஆடை என்றால்,
வேட்டி, புடவை, தாவணி, சட்டை என்று எல்லாவற்றையும் 
குறிக்கும். எனவே இது BROAD SENSEஇல் கூறப்படுவது. ஆனால்,
ரவிக்கை என்பது பெண்களின் மேலாடையை மட்டும் குறிக்கும்.
இது SPECIFIC. இது BROAD அல்ல.
-------------------------------------------------------------------------------------------------------------------      


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக