செவ்வாய், 19 மே, 2015

"லா இலாஹா இல்லல்லாஹ், 
மார்க்ஸ் ரசூல் அல்லாஹ்"
-------------------------------------------------
கணித விதிகளுக்கும் சமூகவியல் விதிகளுக்கும் இடையே 
பாரதூரமான வேறுபாடு உண்டு. கீழ்வகுப்பு அல்ஜிப்ராவில் 
வரும் a plus b whole squared என்ற ஃபார்முலாவில், a மற்றும் b க்கு 
என்ன மதிப்புகளைக் கொடுத்தாலும், அந்த ஃபார்முலா 
செல்லுபடி ஆகும். கணித விதிகள் கறார்த் தன்மையும் 
துல்லியமும் உடையவை. 
**
ஆனால் சமூகவியல் விதிகள் அப்படிப்பட்டவை அல்ல.
அவை கணித விதிகளைப் போன்று நூறு சதம் செல்லுபடியாகக் 
கூடியவை அல்ல. அவை ஒரு போக்கை (TENDENCY)
சுட்டிக் காட்டுபவை. அவ்வளவே. எனவே, மார்க்சியம் கூறும் 
அடித்தளம்-மேல்கட்டுமானம் பற்றிய விதி, நூறு சதம்   
கறார்த் தன்மையும் துல்லியமும் உடையது அல்ல.
சமூகம் இப்படி இப்படி இருக்கிறது, இப்படி இப்படிப் போகும்
என்று சொல்வதன் மூலம், இப்படியாக ஒரு போக்கைச் சுட்டிக் 
காட்டும் விதிதான் அடி-மேல் பற்றிய விதி.
**
மார்க்சும் எங்கல்சும் விஞ்ஞானிகள் அல்ல; அவர்கள் 
தத்துவஞானிகள். மார்க்சியம் என்பது இயற்கை விஞ்ஞானம் 
(Natural Science) அல்ல. அது சமூக விஞ்ஞானம் (Social Science).
இந்த அடிப்படையான புரிதல் இல்லாத எவரும் மார்க்சியர் 
ஆக மாட்டார்.
**
திரையில் ரஜனிகாந்தின் உருவம் தெரிந்த உடனே,
விசில் அடிப்பதும் கைதட்டுவதுமாகப் பரவசம் 
அடைபவன் ரசிகன். மார்க்சுக்கு ரசிகர்கள் கிடையாது;
கூடாது; பின்பற்றுவோர்தான் உண்டு.
**
மார்க்சியம் சர்வரோக நிவாரணி அல்ல. மார்க்சும் 
எங்கல்சும் கடைசி இறைத் தூதர்கள் அல்ல.
"லா இலாஹா இல்லல்லாஹ், 
மார்க்ஸ் ரசூல் அல்லாஹ்"
என்பது மாறாநிலைவாதம்!
-------------------------------------------------------------------------------------------------        
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக