(3) மார்க்சியத்தோடு எவ்விதத் தொடர்பும் இல்லாமல்
நடைபெற்ற வெற்றிகரமான கியூபப் புரட்சி!
----------------------------------------------------------------------------
மார்க்சிஸ்ட் அல்லாத பிடெல் காஸ்ட்ரோ
நடத்திய புரட்சி!
------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
-------------------------------------------------------------------------------------------
1) மார்க்சியம் கியூபப் புரட்சியை வழிநடத்தவில்லை.
2) வெறும் குட்டி முதலாளித்துவ சீர்திருத்தவாதமும்,
அரசமைப்புச் சட்டவாதமும் (CONSTITUTIONALISM) மட்டுமே
கியூபப் புரட்சியை நடத்தின. வெற்றி பெற்றன.
**
3) தமது M-26-7 இயக்கத்தின் வேலைத்திட்டமாக காஸ்ட்ரோ
அறிவித்த எதுவும் புரட்சிகர அம்சத்தைக் கொண்டிருக்கவில்லை.
4) காஸ்ட்ரோவின் வேலைத்திட்டத்தைப் படித்துப் பார்த்த
சே குவேரா, அதன் சீர்திருத்தவாத உள்ளடக்கத்தை உணர்ந்தே
இருந்தார். எனினும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற ஒரு அம்சத்தில்
உடன்பட்டு, கியூபப் புரட்சியில் இணைந்தார்.
**
5) புரட்சியின் பிரதானமான மூன்று தலைவர்களான காஸ்ட்ரோ,
சே குவேரா, ரபூல் காஸ்ட்ரோ ஆகிய மூவருமே மிக்க
இளைஞர்கள்.தங்களின் இருபதுகளில் இருந்தவர்கள்.
6) 1955இல் கொரில்லா படையைத் திரட்டியபோது. பிடலின்
வயது 28 மட்டுமே. (பிறப்பு: 13 ஆகஸ்ட் 1926).
**
7) 1955இல் சே குவேராவின் வயது 26 மட்டுமே.
(பிறப்பு: 14 ஜூன் 1928).
8) காஸ்ட்ரோவின் தம்பி ரவுலின் வயது 24 மட்டுமே.
( பிறப்பு:ஜூன் 3, 1931).
**
9) புரட்சிக்குத் தலைமையேற்ற பிடெல், மார்க்சியத்தையோ
காரல் மார்க்சின் தாஸ் காபிடல் நூலையோ படித்தே
இருக்கவில்லை. மற்ற இருவரும் கூட, போதிய அளவு
மார்க்சியம் பயிலாமலேயே புரட்சியை வழிநடத்தினர்.
10) கியூபா சமூகத்தின் வர்க்கங்களைப் பற்றிய ஆய்வு,
வர்க்க முரண்பாடுகளைப் பற்றிய ஆய்வு, பிரதான முரண்பாடு
பற்றிய தீர்மானம், இன்ன பிற இவை எதுவும் பற்றி
எவ்விதமான மார்க்சிய ஆய்வையும் அவர்கள் நடத்தி
இருக்கவில்லை.
**
11) டூமாவில் பங்கேற்பதா புறக்கணிப்பதா, தேர்தல் பாதை
திருடர் பாதையா அல்லவா, தேசிய ஜனநாயகப் புரட்சியா,
மக்கள் ஜனநாயகப் புரட்சியா, புரட்சியின் கட்டம் என்ன,
என்றெல்லாம் மயிர் பிளக்கும் விவாதங்களை அவர்கள்
நடத்தி இருக்கவில்லை.
12) காரல் மார்க்சையே படித்திராத பிடெல், எங்கல்சின் "குடும்பம் தனிச்சொத்து"நூல் பற்றி அறிந்தே இருக்கவில்லை.
**
13) என்றாலும் புரட்சிய வெற்றிகரமாக நடத்தினர். அரசு
அதிகாரத்தைக் கைப்பற்றினர். கியூபாவை சோஷலிச
நாடாக மாற்றிக் காட்டினர்.
14) சோவியத் ஒன்றியத்தில் லெனினும் ஸ்டாலினும் கட்டியது,
சோஷலிசம் என்ற பெயரிலான பெருந்தொழில்துறை
முதலாளித்துவமே என்று விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால் கியூபாவின் சோஷலிசம் அட்டியின்றி
அனைவராலும் ஏற்கப் பட்டது.
**
15) ஆக, மார்க்சியத்தோடு எவ்விதத் தொடர்பும் இன்றி,
கியூபாவில் புரட்சி வெற்றி அடைந்தது எப்படி? கியூபாவில்
சோஷலிசம் கட்டப் பட்டது எப்படி?
15) தொட்டதெற்கெல்லாம் மார்க்ஸ் எங்கல்சின்
மேற்கோள்களை வறட்டுத் தனமாகப் பிரயோகிக்கும் குட்டி முதலாளித்துவ சொற்காமுகர்கள் (PHRASE MONGERS) பதில் சொல்வார்களா?
**
16) கியூபப் புரட்சியின் படிப்பினையை உணர்வார்களா?
17) ஒருநாளும் மாட்டார்கள்!
----------------------------------------------------------------------------------------------------
வெளியீடு: மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
*******************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக