வெள்ளி, 29 மே, 2015

ஒரே புள்ளியில் சங்கமிக்கும் 
காவிப் புரோகிதர்களும் சிவப்புப் புரோகிதர்களும்!
-------------------------------------------------------------------------------
ஆர்.எஸ்.எஸ் புரோகிதர்களும் மார்க்சியப் புரோகிதர்களும்
ஒரே புள்ளியில் சங்கமிக்கிறார்கள்; ஒரே அலைவரிசையில் 
சிந்திக்கிறார்கள். ஒரு நவீன அறிவியல் கண்டுபிடிப்பு இந்த 
ஆண்டு 2015இல், கண்டுபிடிக்கப் பட்டது என்றால், ஆர் .எஸ்.எஸ் 
புரோகிதர்கள் அதை ஒத்துக் கொள்வதில்லை. இது வேத 
காலத்திலேயே அதர்வண வேதத்தில் சொல்லப் பட்டு 
இருக்கிறது என்பார்கள். டாக்டர் வெர்னர் ஹெய்சன்பெர்க்கின்
uncertainity principle வேதத்தில் இருக்கிறது என்றார் மத்திய 
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
**
மார்க்சியப் புரோகிதர்கள் இவர்களை விஞ்சுகிறார்கள்.
எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு அறிமுகப் படுத்தப் 
பட்டாலும், இதைப் பற்றி ஏற்கனவே எங்கல்ஸ் சொல்லி  
விட்டார் என்றோ அல்லது லெனின் சொல்லி இருக்கிறார் 
என்றோ கூறுகிறார்கள். இப்படிக் கூறுவது மார்க்சியம் 
ஆகாது. இதனால் எங்கல்சுக்கோ லெனினுக்கோ பெருமை 
சேர்க்க முடியாது. 
**
மார்க்சியம்  என்பது மதம் அல்ல. சதா சர்வ காலமும்,
அனைத்தும் இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் 
வளர்ந்து கொண்டும், பழையன கழிந்து கொண்டும், 
புதியன பிறந்து கொண்டும் இருக்கும் உலகத்தில், 
1908ஆம் ஆண்டு அறிவியலின் வளர்ச்சியின் 
அடிப்படையில் அன்று சொன்ன கருத்து இன்றும் 
பொருந்துகிறது என்று குருட்டுப் பாடமாகச் சொல்வது 
மார்க்சியம் அல்ல.
*************************************************************    
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக