செவ்வாய், 5 மே, 2015

திரு ஈஸ்வரன் அவர்கள் கவனத்துக்கு,
எஸ்.என் எனப்படும் மூத்த மார்க்சியர் நாகராஜன்
அவர்களின் ஆக்கங்களை நான் படித்து இருக்கிறேன்.
அவர் வந்தடைந்த முடிவுகள் ஏற்கத் தக்கவை அல்ல
என்பது என்னுடைய புரிதல். இதை என் கட்டுரையிலும்
குறிப்பிட்டு உள்ளேன்.
**
மார்க்சியம் என்பது ஒருங்கிணைந்த தத்துவம்(INTEGRATED).
அதைப் பகுதி பகுதியாகப் பிரித்து (COMPARTMENTALISATION)
ஒன்றுக்கு எதிராக இன்னொன்றை நிறுத்துவது ஏற்கத் தக்கது
அல்ல என்பது என்னுடைய உறுதியான முடிவு. ஆனால்
தோழர் எஸ்.என் மார்க்சியத்தை இரண்டாகப் பிரிக்கிறார்
(கீழை மார்க்சியம், மேலை மார்க்சியம்). இது ஏற்புடைத்தன்று.
அதற்காக, அவரை சிந்தனையாளரே இல்லை என்று பேசுவது
அறிவுடைமை ஆகாது. ராமானுஜரின் சாதிய எதிர்ப்புப்
பணிகளைத் தூற்றுவது பார்ப்பனீயத்துக்கு ஆதரவாய்
முடியும்.
** 
எல்லோருமே முட்டாள்கள், நான் மட்டுமே அறிவாளி
என்று கருதுவது பார்ப்பனீய ஆதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடு.        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக