செவ்வாய், 26 மே, 2015

மூலவினைக்கு மௌனம்!
எதிர்வினையைக் கண்டு ஆத்திரம்!!
---------------------------------------------------------------
ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறான் ஒரு தலித்
இளைஞன். அவன் செல் போனில் ஒரு அழைப்பு. அதில்
ரிங் டோனாக அம்பேத்கார் பாட்டு. இதனால் அவன்  உயிரையே
இழந்தான். அவனைஅடித்துக் கொலை செய்து,
அவன் மீது வண்டிச்சக்கரங்களை ஏற்றி.... எவ்வளவு குரூரம்!
எவ்வளவுகொடூரம்! இது ஏதோ  பன்னிரண்டாம் நூற்றாண்டிலா
நடந்தது? இந்த 2015இல் அல்லவா!
**
சாதிக் கொடூரம் என்பது மூலவினை! அதனால்
பாதிக்கப் பட்டவர்கள் ஆற்றுவது எதிர்வினை!
மூலவினையைக்  கண்டிக்க மனம் இல்லாதவர்கள்
எதிர்வினையைக் கண்டு பொங்குவதில் எவ்வித
நியாயமும் இல்லை.
**
பார்ப்பானின் பூனூலை அறுத்தவன் குண்டர் சட்டத்தில்
கைது ஆகிறான். தலித் படுகொலைகளைப் புரிந்தவன்
எத்தனை பேர் தண்டிக்கப் பட்டு இருக்கிறான்? பதில்
சொல்ல முடியுமா? விவாதம் நடத்த முன்வருவார்களா
சாதி வெறியர்கள்?
**

இன்னும் அடுத்த அரை மணி நேரத்தில் தன்  உயிர்
போகும் என்று நினைத்து இருப்பானா  அந்த தலித்
இளைஞன்? பதில் சொல்லுங்கள் சாதி வெறியர்களே!
பதில் சொல்லுங்கள்!
**
பாதிக்கப் பட்டவர்கள் எதிர்வினை ஆற்றினால், அதைக் 
கண்டு பொங்குவதும் சாதிவெறியை ஆதரிப்பதும் ஒன்றே!
**
இங்கு ஒரு அடிப்படை விதி ஒன்று உள்ளது.
சாதிக்கொடுமை என்ற சிக்கலை அணுகும்போது,
பாதிக்கப் பட்டவனின் பார்வையில் இருந்து அணுக
வேண்டும். ஆதிக்க உணர்வுடன் சாதிக் கொடுமை
புரிந்தவனின் பார்வையில் இருந்து அணுகக் கூடாது.
**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக