கிழிந்து தொங்கும் சாதி வெறியர்களின் முகமூடி!
மார்க்சிய வேடதாரிகளைத் தோலுரிக்கும் ஐ.ஐ.டி நிகழ்வுகள்!
------------------------------------------------------------------------------------------------
அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்துக்கு ஐ.ஐ.டி.யில் தடை
விதிக்கப் பட்டுள்ளது. இந்துத்துவம் தன்னுடைய வலிமையான
எதிரியாக அம்பேத்கார்-பெரியாரைக் கருதுகிறது என்பது
இந்நிகழ்வின் மூலம் புலப் படுகிறது.
**
இந்நிகழ்வு கி.மு மூன்றாம் நூற்றாண்டிலோ, கி.பி எட்டாம்
நூற்றாண்டிலோ நடந்த நிகழ்வு அல்ல. 2015இல் நடக்கிறது.
எங்கோ ஜார்க்கண்டிலோ சட்டிஸ்கரிலோ உள்ள பழங்குடி இன
மக்கள் மீது விதிக்கப்பட்ட தடை அல்ல இது. அதிக IQ உடைய
IIT மாணவர்கள் மீது விதிக்கப்பட்ட தடை ஆகும்.பெரியாருக்கு
அவர் வாழ்ந்த மண்ணிலேயே தடை விதிக்கும் ஆர்.எஸ்.எஸ்.சின்
குரூரமும் இத்தடையில் வெளிப்படுகிறது!
**
சாதியை ஒழிக்க விரும்பும் மார்க்சியம், பெரியார்-அம்பேத்கரின்
பங்களிப்புகளைச் சுவீகரித்துக் கொள்ள வேண்டும் என்று
நாம் வலியுறுத்தினோம். சில மார்க்சியப் போலி வேடதாரிகள்
இதை ஏற்க மறுத்து பெரியார்-அம்பேத்காரைக் கொச்சைப்
படுத்தி வந்தனர். மார்க்சியமூல ஆசான்களின் படைப்பில்
சாதிக்குத் தீர்வு சொல்லப்படவில்லை என்ற உண்மையை
நாம் நமது தொடர்கட்டுரைகளின் மூலம் நிரூபித்தோம்.
**
எனவே, இந்திய மார்க்சியர்கள், தம் சொந்த முயற்சியில்,
அம்பேத்கர்-பெரியார் பங்களிப்புகளைச் சுவீகரித்துக் கொண்டு,
மர்ர்க்சியம் கூறும் உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்
சாதியச் சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் என்று நாம்
கூறி வந்தோம். இன்று ஐ.ஐ.டி. நிகழ்வானது, நமது கூற்று
முற்றிலும் சரியே என்று நிரூபித்துள்ளது.
**
இதுவரை உலகில் தோன்றிய தத்துவங்கள் யாவற்றிலும்
மார்க்சியமே தலைசிறந்தது என்பதை ஆயிரம் முறை
வலியுறுத்தி உள்ளோம். பெரியாரிய-அம்பேத்கரிய
சிந்தனைகள் மார்க்சியத்துக்கு இணக்கமானவையே தவிர
எதிரானவை அல்ல என்பதையும் தெளிவுபடுத்தி
உள்ளோம்.
**
இருப்பினும், முகநூலில் மட்டுமே மார்க்சியராக வலம்
வரும், திரு ஏ.கே.ஈஸ்வரன் போன்ற, மார்க்சிய வேடதாரிகள்
எமது கருத்தை மறுக்கிற சாக்கில், அம்பேத்கர்-பெரியாரை
இழித்தும் பழித்தும் ஏளனம் செய்தும் பதிவுகளையும்
பின்னூட்டங்களையும் வெளியிட்டுத் தங்களின் சாதிவெறியைத்
தாங்களே அம்பலப் படுத்திக் கொண்டனர்.
**
இன்று இந்த ஐ.ஐ.டி நிகழ்வுகள் நமது நிலைபாடு மட்டுமே
சரியானது என்பதை உணர்த்துகிறது. அம்பேத்கர்-பெரியார்
துணை இல்லாமல் எந்தக் கொம்பாதி கொம்பனாலும்
சாதியின் மயிரைக் கூடப் பிடுங்க முடியாது என்ற நம்முடைய
கருத்து ஐ.ஐ.டி நிகழ்வு மூலம் உறுதிப் படுகிறது.
**
தடையை எதிர்த்துப் போராட்டம் நடத்திய 1) பு.மா.இ.மு
2) DYFI ஆகிய இளைஞர் அமைப்புகள் நமது நிலைபாட்டையே
உறுதி செய்தன. மார்க்சிய வேடதாரிகள் தங்களின் முகத்தை
எந்த மண்ணுக்குள் புதைத்துக் கொள்வார்கள்?
*********************************************************************

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக