ரஷ்ய புரட்சிக்கு பிந்தைய அபிவிருத்திகள் மிக சிக்கலானவை, ஆழமான மற்றும் கோட்பாட்டு ரீதியான பல விவாதங்களை,அது பற்றி எழுதப்பட்ட ட்ரொட்ஸ்கியின் லெனின் கடசி மரணசாசனம் பற்றி படிக்காமல்,ஸ்ராலினது தனிநாட்டில் சோசலிசத்தின் பின்விளைவுதான் சோவியத்தின் உடைவு என்பதை யாரும் புரிந்துகொள்ள முடியாது. உங்க மறமண்டைகளுக்கு புரியறது மாதிரி சொல்லணும்னா, போராளிகளின் மக்களின் தியாகங்களை சுரண்டிக்கொண்டு பிரபாகரன் சில வெற்றிகளை குவித்து பின்னர் எதிரியுடன்,இந்தியாவுடன் ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்தார்.ஏன் தமது சொந்த ஆட்சியை ஸ்தாபிக்க வேண்டுமானால் சமரசம் விட்டுக்கொடுப்பு செய்யாமல் அதை அடைய முடியாது என்பதால். அப்படித்தான்,ரஷ்ய புரட்சியின் தேட்டங்களை சுரண்டிக்கொண்டு ஸ்ராலின் அதிகாரத்துவத்தின் நலன்களுக்காக ரஷ்ய தொழிலாள வர்க்கத்தினை மட்டுமல்ல உலக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகளையும் காட்டிக்கொடுத்தார்.அதிகாரத்துவ தட்டின் நோக்கம் ரஷ்யாவினை பலமான அரசாக கட்டியமைப்பது அதன்மூலம் அதிகாரத்துவம் உழைக்கும் மக்களினை கட்டுப்படுத்தி சில சலுகைகளை பெறுவதே..இதனால் தான் ஏகாதிபத்தியத்துடன் யால்ட்ட ஒப்பந்தம் மற்றும் கிட்லருடனான குருட்டுத்தனமான ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். அடிமுட்டாள் தனமான ஸ்ராலின் முடிவானது, அவரது தேசியவாத தனிநாட்டில் சோசலிசத்தின் குருட்டுத்தன அரசியலின் விளைவாகும். இந்த ஒப்பந்த தின் ஊடாக ரஷ்யாவினை பாதுகாத்துவிடலாம் என நினைத்தார். கிட்லர் ரஷ்யாவினை தாக்கமாட்டான்,ஒப்பந்த த்தை மீறமாட்டான என நினைத்து தப்புக்கணக்கில் இருந்தார்,அடி விழ வெளிக்கிட்டவுடன் தான் விழித்துக்கொண்டார்,அதன்காரணமாகத்தான்,ஸ்ராலினின் தப்புக்கணக்கு காரணமாகத்தான் பல மில்லியன் கணக்கான தொழிலாளர்கள்,செம்படை வீர ர்கள் அவசியமற்று இறந்தார்கள்.
ஆனால் ரஷ்ய புரட்சியின் தேட்டத்தின் மீதிருந்த நம்பிக்கைதான் மீண்டும் மக்களுக்கு தமது சொந்த புரட்சியினை காப்பாற்றவிட்டால் மாபெரும் அழிவு வரும் என்பதால் தம் உயிரை துச்சமாக மதித்து பல உயிர் தியாகங்களை செய்து ரஷ்யாவினை பாதுகாத்தார்கள். இந்த அழிவுகளை தவிர்த்திருக்க முடியும் உண்மையில் ஸ்ராலின் சோசலிச சர்வதேசியவாத த்திற்காக போராடியிருந்தால் ஆனால் அவர் இறுதியில் ட்ரொட்ஸ்கியை நாடுகட்த்திவிட்டு தான் பாதுகாத்த கட்சிக்குள் வேரூன்றிய அதிகாரத்துவ தட்டுக்கு அடிபணிந்து தனது உயிர்த் தோழர்களைக்கூட படுகொலை செய்தார். அந்த மட்டத்திற்கு அதிகாரத்துவ தட்டின் வெறிபிடித்த பாதுகாவலராக ஸ்ராலின் உருவெடுத்தார். இதை புரிந்துகொள்ள வேண்டுமானால் ட்ரொட்ஸ்கியின் படைப்புக்களையும் லெனின் ஏப்ரல் தேசிஸ் மற்றும் டெஸ்டாமென்டினை படியுங்கள். பல கேள்விகளில் ஸ்ராலின் தவறாக முடிவெடுக்கிறார் வளர்ந்துவந்த அதிகாரத்துவ தட்டுக்கு அடிபணிந்துவிட்டார் என லெனின் புரிந்ுகொண்டபோது பாரிய நோயினால் பாதிக்கப்பட்டுவிட்டார்.அந்த நோயினை குணப்படுத்தாது ஒழுங்கான மருந்துகொடுக்காது வைத்து அவரை மேலும் வருத்தி சாகடித்ததில் ஸ்ராலின் முக்கியபாத்திரம் வகித்தார். இதை அவர் வளர்ந்து வந்த அதிகாரத்துவ தட்டின் வெறிபிடித்த நலன்களுக்காக செய்தார். லெனின் இறந்தவுடன் லெனினை தெய்வமாக்கிவிட்டு அவர் பெயரால் பெரும் அழிவுகளைச் செய்தார். இதை நாம் விடுதலைபுலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைவிதியுடன் ஒப்பிட்டு புரிந்துகொள்ளலாம்..பிரபாகரன் இறந்துவிட்டார் என கூறி அல்லது இறக்கவில்லை என கூறி அதைவைத்து அவரை புனிதராக்கிவிட்டு அரசியல் செய்யும் பினாமிகளைப்போல்தான்..முற்றாக அதற்கு ஒப்பிட முடியாது இருந்தும் நோக்கம் ஒன்றுதான். தமது சொந்த அதிகாரத்துவ நலனை பாதுகாக்க புரட்சியின் தேட்டங்களளை பாவித்து தமது நலன்களுக்காக உலக உழைக்கும் மக்களின் நலன்களை காட்டிக்கொடுத்தார்கள். லெனினை புனிதமாக்கிவிட்டு அந்தப்புரட்சியின் சர்வதேச அடித்தளத்தினை கைவிட்டார்கள்.இதன் காரணமாகத்தான் ரஷ்ய உடையவேண்டி வந்த து. இருந்தும் ரஷ்ய அடைந்த பல வியக்கத்தக்க சாதனைகள் புரட்சியின் தேட்டங்களால் உந்தப்பட்டவையே,.ஆனாலும் ஜரோப்பாவுக்கு விரிவாக்கப்பட்டிருக்குமானால் நாம் இன்று ஒரு சோசலிச உலகத்தில் வாழ்ந்துகொண்டிருப்போம்...இதை ஸ்ராலின் தனது தனிநாட்டில் சோசலிசம் என்ற கொள்கையின் அடிப்படையில் காட்டிக்கொடுத்தார்.உலகத் தொழிலாள வர்க்கத்திற்கு மாபெரும் அழிவினை விளைவாக்கினார். ட்ரொட்ஸ்கியின் இந்த ஆய்வினை முழுதாக படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
http://www.wsws.org/…/c…/books/Lesson_October/chapter2.shtml
அதிகாரத்தை வெற்றி கொள்ளுதல் என்ற பிரச்சினை கட்சிக்கு முன்னால் ஏப்ரல் 4ம் தேதிக்கு பின்னர்தான், அதாவது லெனின் பெட்ரோகிராடிற்கு வந்த பின்னர்தான் எழுந்தது. ஆனால் அந்த கணத்திற்குப் பின்னரும்கூட, கட்சியின் அரசியல் நிலைப்பாடு எவரும் சவாலுக்கு அழைக்காத, ஒற்றுமையான, பிளவற்ற தன்மையை எந்தவகையினாலும் முயன்றுபெறவில்லை. 1917 ஏப்ரல் 28 மாநாட்டின் முடிவுகளுக்கு பின்னரும், புரட்சிகர போக்கிற்கு எதிர்ப்பு என்பது சில சமயம் மறைந்தும், சில சமயம் வெளிப்படையாகவும் தயாரிப்புக்காலம் முழுவதும் பரவியிருந்தது.
அதிகாரத்தை வெற்றி கொள்ளுதல் என்ற பிரச்சினை கட்சிக்கு முன்னால் ஏப்ரல் 4ம் தேதிக்கு பின்னர்தான், அதாவது லெனின் பெட்ரோகிராடிற்கு வந்த பின்னர்தான் எழுந்தது. ஆனால் அந்த கணத்திற்குப் பின்னரும்கூட, கட்சியின் அரசியல் நிலைப்பாடு எவரும் சவாலுக்கு அழைக்காத, ஒற்றுமையான, பிளவற்ற தன்மையை எந்தவகையினாலும் முயன்றுபெறவில்லை. 1917 ஏப்ரல் 28 மாநாட்டின் முடிவுகளுக்கு பின்னரும், புரட்சிகர போக்கிற்கு எதிர்ப்பு என்பது சில சமயம் மறைந்தும், சில சமயம் வெளிப்படையாகவும் தயாரிப்புக்காலம் முழுவதும் பரவியிருந்தது.
பெப்ரவரிக்கும் அக்டோபர் புரட்சியின் விளைவுகள் பலப்படுத்தப்படுவதற்கும் இடையே இருந்த கருத்துவேறுபாடுகளின் போக்கைப் பற்றிய ஆய்வு மிக அசாதரணமான முறையில் கோட்பாட்டு முக்கியத்துவத்தை கொண்டிருந்ததோடு மட்டும் அல்லாமல், நடைமுறையிலும் பெரும் முக்கியத்துவத்தையும் கொண்டிருந்தது. 1910ம் ஆண்டு லெனின், 1903ம் ஆண்டின் கட்சியின் இரண்டாம் மாநாட்டின் கருத்து வேறுபாடுகளை பற்றிப் பேசுகையில் "எதிர்பார்க்கப்பட்டவைதான்" என்று குறிப்பிட்டார், அதாவது ஒரு முன்னெச்சரிக்கை என்று குறிப்பிட்டார். இந்த வேறுபாடுகளை அவற்றின் ஆதாரத்தில் தேடுவது அதாவது 1903 அல்லது அதற்கும் முந்தைய காலத்தில் "பொருளாதாரவாதம்" (Economism) எனப்பட்ட காலத்தில் இருந்து ஆராய்வது முக்கியமாகும். ஆனால் அத்தகைய ஆய்வு அதன் தர்க்கரீதியான முடிவுக்கு வந்தால்தான் பொருள்பட இருக்கும்; இந்த வேறுபாடுகள் தீர்க்கமான சோதனைக்கு சமர்ப்பிக்கப்பட்டன என்றால், சொல்வதாயின், அது அக்டோபர் காலகட்டம் ஆகும்.
இந்த முன்னுரையின் வரம்பிற்குள் இப்போராட்டத்தின் அனைத்து கட்டங்களையும் மிக விரிவான முறையில் ஆராய முடியாது. ஆனால் எமது இலக்கியத்தில் நம் கட்சியின் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கும் வருந்தத்தக்க இடைவெளியை ஓரளவேனும் இட்டு நிரப்புவது பற்றி பரிசீலிப்பது தவிர்க்க முடியாதது என்று கருதுகிறோம்.
ஏற்கனவே கூறியுள்ளபடி, வேறுபாடுகள் அதிகாரம் பற்றிய பிரச்சினையைச்சுற்றி மையம்கொண்டிருந்தன. பொதுவாகப் பேசுகையில், புரட்சிக் கட்சியின் தன்மை (மற்ற கட்சிகளை பற்றியும் கூட) பற்றி நிர்ணயிக்கும் உரைகல் இதுதான்.
அதிகாரப் பிரச்சினை மற்றும் போர் பற்றிய பிரச்சினை இவற்றிற்கிடையே உள்ள நெருங்கிய தொடர்பு இக்காலக்கட்டத்தில் முன்வைக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. இந்த பிரச்சினைகளை நாம் காலவரிசைப்பட்டியின்படி, முக்கியமான நிகழ்வுகளை ஒட்டி, பரிசீலிக்குமாறு முன்மொழிகிறோம்: அவை, ஜாரிசம் அகற்றப்பட்ட காலத்திற்குப்பின், லெனின் வருவதற்கு முன் என்ற முதல்காலம்; லெனினுடைய கருத்தாய்வுகளை சுற்றி நிகழ்ந்த போராட்டம்; ஏப்ரல் மாநாடு; ஜூலை நாட்களுக்கு பின்னர் நடந்தவை; கோர்னிலாவ் காலகட்டம்; ஜனநாயக மாநாடும், பாராளுமன்றத்திற்கு முந்தைய அமைப்பும்; ஆயுதமேந்திய எழுச்சியும் அதிகாரத்தை கைப்பற்றுதலும் பற்றிய பிரச்சினை (செப்டம்பரில் இருந்து அக்டோபர் வரை); மற்றும் "ஒரேதன்மையுடைய" சோசலிச அரசாங்கம் ஆகியவையாகும¢.
இக்கருத்து வேறுபாடுகளை பற்றிய ஆய்வானது, கம்யூனிச அகிலத்தின் ஏனைய கட்சிகளுக்கு கணிசமான முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை எடுத்துக் கொள்ள உதவும் என்று நாம் நம்புகிறோம்.
ரஷ்யப் புரட்சி நடந்த காலத்தில், ரஷ்யா ஐரோப்பாவில் மிகவும் பின்தங்கிய நாடாக இருந்தது. நாட்டுப்புறங்கள் விவசாயப் பொருளாதாரத்தை நம்பியிருந்த நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் இருந்தன. நகர்ப்புறங்களில் முதலாளித்துவம் வளர்ச்சி அடையாமல் இருந்தது.
சுருக்கமாக, அன்றைய சோவியத் யூனியன், அன்றிருந்த மேற்கு ஐரோப்பாவை விட ஐம்பது அல்லது நூறு வருடங்கள் பின்தங்கி இருந்தது. அப்படியான அரசியல்- பொருளாதாரப் பின்னணியில் தான் ஸ்டாலின் அதிபராகப் பதவியேற்றார்.
ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பின்னர், ரஷ்யாவின் நூறாண்டு கால பொருளாதாரப் பின்னடைவை வெறும் பத்து வருடங்களுக்குள் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று விரும்பினார். "நாங்கள் முதலாளித்துவ நாடுகளுக்கு சமமாக வளர்ச்சி அடைவோம், அல்லது அழிந்து விடுவோம்" என்ற லெனினின் கூற்றை மேற்கோள் காட்டினார்.
"மேற்கு ஐரோப்பாவில் கடந்த நூறு வருடங்களில் நடந்த தொழிற்புரட்சி, சோவியத் யூனியனில் பத்து வருடங்கலுக்குள் நடக்க வேண்டும். இல்லாவிட்டால், அயலில் உள்ள முன்னேறிய முதலாளித்துவ நாடுகளான ஜெர்மனி, ஜப்பான், பிரிட்டன் போன்றன ரஷ்யா மீது படையெடுத்து ஆக்கிரமித்து விடும் என்று கூறினார்.
ஸ்டாலினின் தீர்க்கதரிசனத்தை மெய்ப்பிப்பது போல, 1941 ம் ஆண்டு, நாஸி ஜெர்மனி படையெடுத்து வந்து, உக்ரைன், வெள்ளை, ரஷ்யா, மற்றும் பல ரஷ்யாவின் ஐரோப்பிய பிரதேசங்களை ஆக்கிரமித்தது. ஆனால், அதற்கு முன்னர் ஸ்டாலினின் சோஷலிச தொழிற்புரட்சியானது, சோவியத் யூனியனை நவீன இராணுவ வல்லரசாக மாற்றி விட்டிருந்தது.
Gosplan எனும் அரச திட்டமிடல் அமைப்பு, இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்றி, சோஷலிச பொருளாதாரத்தை, மேற்கத்திய முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு சமமாக கொண்டு வந்தது. அதன் விளைவு, 1945 ம் ஆண்டு, முழு உலகிற்கும் தெரிய வந்தது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளான ஜெர்மனியும், ஜப்பானும் போரில் தோற்கடிக்கப் பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக