ஞாயிறு, 10 மே, 2015

1) மார்க்சியக் கல்வி என்பது, மூன்று மாதம் அல்லது ஆறு மாதம்
மட்டுமே நீடிக்கக்கூடிய கம்ப்யூட்டர் கோர்ஸ் அல்ல. இப்படிக்
கருதுகிற ஒரு குட்டி முதலாளித்துவப் போக்கு இன்று காணப்
படுகிறது. ஒரு சில கோஷங்களை அல்லது மேற்கோள்களை
மட்டும் கற்பதன் மூலம் மார்க்சியத்தைக் கற்று விட்டதாக
எண்ணுவது தவறு. இதைக் கண்டித்துத்தான் இந்தப் பதிவு.
2) மார்க்சியக் கல்வியின் ஆழ அகலங்களை வலியுறுத்தும்
இப்பதிவில் குறை காண்பது மிகவும் துரதிர்ஷ்டமானது.
**
3) மார்க்சியம் அனைத்தும் தழுவிய தத்துவம் என்பதன் பொருள்,
அது ஒரு "பகுதித் தத்துவம்"அல்ல என்பதுதான். இந்த பூமியில்
வாழும் எல்லா மனிதர்களுக்கும் (மத, இன, மொழி, இன்ன பிற
வேறுபாடுகள் இல்லாமல்) பொருந்த வேண்டும் என்ற
நோக்கத்துடன் மூல ஆசான்கள் மார்க்சியத்தைப்
படைத்தார்கள் என்று சொல்வதில் குறை காண்பதைப்
பற்றி என்ன சொல்ல இருக்கிறது?
4) மார்க்சியம் அனைத்தும் தழுவிய தத்துவம் என்றால்,
அனைத்து அறிவுத் துறைகளின் சாரத்தையும் உள்ளடக்கியது
என்றுதான் பொருள். அனைத்தும் தழுவியது என்றால்
முதலாளித்துவத்தையும் தழுவியது என்று பொருள்
கொண்டால், நான் என்ன செய்ய முடியும்?
**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக