புதன், 13 மே, 2015

ஓர் உயர்நீதிமன்ற நீதிபதி நடுரோட்டில் குடித்து விட்டு 
உருண்டாலும், காமிரா வெளிச்சத்தில் கோடி ரூபாய் 
லஞ்சம் வாங்கினாலும் கூட, அவர் மீது நடவடிக்கை 
எடுக்க முடியாது!
------------------------------------------------------------------------------------  
ஊழல் அரசியல்வாதிகளை விட, ஊழல் நீதிபதிகள்தான் 
மிகவும் ஆபத்தானவர்கள். எனவே நீதித்துறையின் ஊழல் 
உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு, நீதித்துறை 
சீர்திருத்தம் மிகவும் அவசியம்.
**
உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு 
மிக வலிமையான ஒரு பாதுகாப்புக் கவசம் (IMMUNITY)
உள்ளது. ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி எவ்வளவு வெளிப்படையாக 
லஞ்சம் வாங்கினாலும், ஊழல் புரிந்து அம்பலப்பட்டுப் 
போனாலும், அவர் மீது யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்க 
முடியாது. அவரைச் சிறையில் தள்ள வேண்டாம், அவரைப் 
பதவிநீக்கம் கூடச் செய்ய முடியாது.
**
ஒரு நீதிபதியைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றால்,
நாடாளுமன்றத்தில் அவர் மீது IMPEACHMENT  தீர்மானம் 
கொண்டு வர வேண்டும். அது வெற்றி பெற வேண்டும் என்றால் 
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும்.
இது சாத்தியமா?
**
சுதந்திர இந்தியாவில் ஒரே ஒருவர் மீதுதான் இப்படி 
IMPEACHMENT கொண்டு வந்து நிறைவேற்றப் பட்டுள்ளது.
எனவே, அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி, உச்சநீதிமன்ற 
மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு இருக்கக் கூடிய 
இந்தப் பாதுகாப்புக் கவசத்தை ரத்து செய்து, அவர்கள் மீது 
நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும்.
**
கேப்டன் நியூஸ்  டி.வி.விவாதத்தில், (12.05.2015, இரவு 9 to 10 மணி)
நியூட்டன் அறிவியல் மன்றம் தெரிவித்த கருத்து.
**********************************************************************      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக