வியாழன், 28 மே, 2015

புனித மூடர்களாய் பவனி வரும் 
மார்க்சியப் புரோகிதர்களும் மொழிக்கொலையும்!
-----------------------------------------------------------------------------
1970களில் லெனின் எழுதிய ஒரு புத்தகத்தை 
ஐந்து காசு விலையில், NCBH கடையில் இருந்து 
வாங்கினேன்.மார்ட்டினோவ்  போன்ற ரஷ்யத் 
திருத்தல்வாதிகளுக்கு லெனின் அளித்த மறுப்புரைகளின் 
தொகுப்பு அந்த நூல். பொதுவில் தொழிற்சங்க அரங்கில் 
எவ்வாறு வேலை செய்வது என்று கம்யூனிஸ்ட்களுக்கு 
வழிகாட்டும் நூல் அது.
**
லெனின் எழுதிய அந்த நூலின் பெயர்:
"WHAT IS TO BE DONE?"   
நான் வாங்கியது அந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. 
நூலின் தலைப்பு: "செய்யப்பட வேண்டியது என்ன?"
**
மார்க்சிய மொழிபெயர்ப்பாளர்கள் என்னும் நாமகரணத்துடன் 
அலையும் மார்க்சியப் புரோகிதர்கள் "செய்யப்பட வேண்டியது 
என்ன?" என்று மொழிபெயர்ப்புக் கொலை புரிந்து 
இருந்தார்கள்.
**
ஆங்கில மூலத்தில், PASSIVE  VOICE இருப்பதால்,
தமிழ் மொழிபெயர்ப்பிலும் அதே PASSIVE VOICE இருக்க 
வேண்டும் என்ற புனிதக் கோட்பாட்டின் அடிப்படையில் 
மார்க்சியப் புரோகிதர்கள் மொழிபெயர்த்து இருந்தார்கள்.
**
இப்படிப்பட்ட முட்டாள்களை, புனித மூடர்கள் என்கிறார் 
இம்மானுவேல் கான்ட். இந்தப் புரோகிதர்களை நம்பினால் 
மார்க்சியம் படிக்க முடியாது என்று உணர்ந்த நானும் 
என் நண்பர்களும், மீண்டும் NCBH சென்று ஆங்கிலப் 
புத்தகத்தை வாங்கிப் படித்தோம்.
**
வாசகர்களிடம் செருப்படி வாங்கிய பின், திருந்திய 
இப்புரோகிதர்கள் தற்போது, "என்ன செய்ய வேண்டும்?"
என்று நூலுக்குத் தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
**
இன்றைக்கும் மார்க்சியப் புரோகிதர்கள் நிறையவே 
சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். நாம்தான் எச்சரிக்கையாக 
இருக்க வேண்டும்.
****************************************************************** 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக