திங்கள், 18 மே, 2015

புரோகிதவாதம் (அல்லது) தமிழ்ச் சூழலில் 
ஐயங்காரியம் என்றால் என்ன?
(அடித்தளம்-மேல்கட்டுமானம் குறித்த மார்க்சியப் பார்வை)
---------------------------------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம் 
-------------------------------------------------------------------------------------------------  
அடித்தளம்-மேல்கட்டுமானம் என்ற கருத்தாக்கம் கட்டிடக்கலை 
(architecture) சார்ந்த விஷயம் அல்ல. இது மனித சமூகத்தின் வரலாற்றில் இருந்தும், சமூகத்தின் இயக்கத்தில் இருந்தும் பெற்ற ஒரு கருத்தாக்கம்.
அடி-மேல் ஆகிய இரண்டும் ஒருங்கிணைந்த தன்மை உடையவை 
(An integrated whole). ஒருங்கிணைந்த எந்த ஒரு ஒழுங்கமைவிலும் 
(system) பரஸ்பர வினை புரிதலும், பரஸ்பரத் தாக்கமும் இருக்கும்.
இருக்கத்தான் செய்யும். 
**
பொதுவான நிலைமைகளில் அடித்தளமே
தீர்மானிக்கும் என்றபோதிலும், சில விசேஷித்த நிலைமைகளில் 
மேல்கட்டுமானமும் தீர்மானிக்கும். இந்தியச் சூழலில், மதமும் 
சாதியும் இதற்கான உதாரணங்கள் ஆகும். அதே நேரத்தில்,
இது ( மேல்கட்டுமானம் அடித்தளத்தைத் தீர்மானிப்பது)
விதியாக அல்ல, விதிவிலக்காகவே நிகழும்.
**
இதுதான் மார்க்சியம்; இதுதான் மார்க்சியப் பார்வை. எனினும்,
இது மார்க்சியமே அல்ல என்று பெருங்குரலில் கூச்சலிட 
எவர் ஒருவருக்கும் உள்ள உரிமையை மறுத்தல் கூடாது.
அப்படியாயின், இது மார்க்சியமாக இல்லாமல் போகட்டும்.
ஆனால், இதுதான் மனித சமூக இயக்கத்தைப் பற்றிய 
சரியான துல்லியமான அறிவியல் பார்வை.
** 
இதற்கு எதிராகச் சொல்லப்படும் எந்தக் கருத்தும் 
அறிவியலற்ற கருத்தே (UNSCIENTIFIC). அதன் பெயர் 
புரோகிதவாதம் (PRIESTISM) ஆகும்.        
**************************************************************   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக