கத்துக்குட்டி மார்க்சிஸ்டுகளுக்கு
எங்கல்சின் எச்சரிக்கை!
-----------------------------------------------------------------------
மார்க்சிய சிந்தனைப் பயிலகம்
-------------------------------------------------------------------------
அடித்தளம்-மேல்கட்டுமானம் என்பது மார்க்சியம் கூறுகிற
ஒரு வகைமை (CATEGORISATION). மனித சமூகத்தில்
பொருளாதாரமே அனைத்துக்கும் அடித்தளமாக இருக்கிறது
என்றும், கலை, இலக்கியம், பண்பாடு, சமயம் ஆகியவை
மேல்கட்டுமனமாக இருக்கிறது என்றும் மார்க்சியம் கூறுகிறது.
இதை நாம் ஏற்கனவே விளக்கி இருக்கிறோம். விரும்புவோர்
நமது முந்தைய கட்டுரைகளைப் படிக்கலாம்.
**
அடித்தளமே பிரதானமானது.மேல்கட்டுமானம் அதற்குக் கீழ்ப்பட்டது.
அடித்தளமே மேல்கட்டுமானத்தைத் தீர்மானிக்கும் என்று
இந்த விதி கூறுகிறது.
**
மனித சமூக இயக்கத்தைப் பற்றிய இந்த விதிக்கு எல்லைகள்
உண்டு. எல்லைகள் அற்ற, எங்கும், எதிலும், எப்போதும்
பொருந்துகிற விதி அல்ல இது. எனினும் இதன் எல்லைகள்
குறுகியவை அல்ல. மிகவும் விரிந்த எல்லைகளுக்குள்
செயல்படுவது இந்த விதி. ஆகப் பெரும்பான்மையான அல்லது
மீப் பெரும்பான்மையான (HYPER MAJORITY) நிகழ்வுகளில்,
(அதாவது, சமூகத்தின் இயக்கங்களில்) இந்த விதி
செயல்படும். என்றாலும் இது ஒரு யுனிவர்சல் விதி அல்ல.
இந்த வகைமைக்கு உட்படாத சமூக இயக்கங்களும் உண்டு.
சான்றாக, மொழியைக் கூறலாம்.
மொழி என்பது சமூகத்தின் இயக்கத்தின் போக்கில் ஒரு கட்டத்தில் தோன்றுவது. இது இந்த வகைமைக்குள் அடங்காது.
**
நமது கூற்றை வறட்டு மார்க்சியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.
இது ஒரு யுனிவர்சல் விதி என்று வாதாடுவார்கள். அடித்தளம்
என்பது எஜமான்; மேல்கட்டுமானம் என்பது அடிமை என்பார்கள்.
கம்யூனிக்கேசன் நெட்வொர்க்கில் எஜமான்-அடிமை என்று ஒரு
முறை உண்டு (MASTER-SLAVE PROTOCOL).இதைப் போல,
அடித்தள-மேல்கட்டுமான உறவு எஜமான்-அடிமை உறவு
போன்றது என்று பிடிவாதம் செய்வார்கள்.
**
எங்கல்ஸ் கூறுகிறார்:
-------------------------------------
"மார்க்சியத்தைப் புதிதாகக் கற்கும் சிலர், சில நேரங்களில்,
பொருளாதாரத் தரப்புக்கு, அதற்கு உரித்தானதை விட, அதிக
அழுத்தம் தருகிறார்கள்". ---(1)
எங்கல்ஸ் மேலும் கூறுகிறார்:
------------------------------------------------.
"இவ்விதமாக, எண்ணிலடங்கா சக்திகள்
(அடித்தளம்-மேல்கட்டுமானத்தின் மீது) ஊடாடுகின்றன.
முடிவுறாத் தொடராக அமைந்திருக்கும் விசைகளின்
இணைகரங்களைப் போல இவை ஊடாடுகின்றன. இந்த
ஊடாட்டம் இறுதியில் வரலாற்றைப் படைக்கிறது".....(2)
**
பார்க்க: (1) மற்றும் (2):
1890இல் லண்டனில் இருந்து எங்கல்ஸ் தம் நண்பர்
ஜே.பிளாக் என்பவருக்கு எழுதிய கடிதம்.
**
இதில் இருந்து என்ன தெரிகிறது?
சிலர் பொருளாதாரக் காரணிக்கு அதிக முக்கியத்துவம்
தருகிறார்கள். இவர்கள் கத்துக்குட்டி மார்க்சிஸ்டுகள் என்பது
தெரிகிறது. மேலும், பொருளாதாரம் மட்டும் அல்ல,
எண்ணில் அடங்கா சக்திகள் ஊடாடுகின்றன என்றும்
தெரிகிறது. (இதை நன்கு புரிந்து கொள்ள, வெக்டார்
அல்ஜிப்ராவில் உள்ள PARALLELLOGRAM LAW OF FORCES
பற்றியும், அல்ஜிப்ரா மற்றும் கால்குலசில் வரும்
INFINITE SERIES பற்றியும் அறிந்திருக்க வேண்டும்)
******************************************************
தொடரும்
----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக