வியாழன், 21 மே, 2015

ராஜீவ் காந்தி மரணம் ஒரு விபத்தே!
(கட்டுரையின் இரண்டாம் பகுதி)
------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
தலைவர்,
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------
ராஜீவ் காந்தி மரணம் குறித்து பல தியரிகள் உள்ளன.
விடுதலைப் புலிகள்தான், தாணு என்ற மனித வெடிகுண்டுப் 
பெண் மூலம் ராஜீவ் காந்தியைக் கொன்றனர் என்பது 
கார்த்திகேயன் முன்வைத்த தியரி. இந்த தியரியை 
உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு பலருக்கும் தண்டனை 
வழங்கப் பட்டுள்ளது.
**
உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாலேயே இது சரியான
தியரி என்றோ, இந்த தியரிதான் உண்மைக்கு மிகவும் 
நெருக்கமானது என்றோ கூறி விட முடியாது. இந்தத் 
தியரி,  அடிப்படையிலேயே தவறானது (FUNDAMENTALLY 
FLAWED) என்று வன்மையாகக் கண்டித்து பல கருத்துக்கள் 
இந்தியச் சமூகத்தின் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன.
பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன.
**
இதில் சர்வதேச சதி உள்ளது என்ற கருத்தின் அடிப்படையில் 
இன்னும் விரிவான சதியைக்  (WIDER CONSPIRACY) கண்டறியும் 
நோக்குடன் பல்நோக்கு விசாரணைக் குழு அமைக்கப் 
பட்டுள்ளது. என்றாலும் அது பட்ட மரமாகக் கிடக்கிறது.
இதன் மூலம் சர்வதேச சதிகாரர்கள் காப்பாற்றப் பட்டு 
விட்டார்கள்.
**
இன்னும் பலவற்றைக் கூற முடியும்; விரிவஞ்சி விடுக்கிறேன்.
எனவே, கார்த்திகேயனின் தியரி சரியானதல்ல; அது நிரூபிக்கப் 
படவில்லை. எனவே ஏற்கத் தக்கதல்ல. இந்நிலையில், 
அறிவியல் ரீதியாக ஆராய்ந்து ராஜிவ் காந்தி மரணம் 
ஒரு விபத்தே என்ற தியரியை நியூட்டன் 
அறிவியல் மன்றம் முன்வைக்கிறது.
**
ராஜீவ் காந்தி மரணம் குறித்த பல்வேறு தியரிகளில் இதுவும் 
ஒன்று. இதை அறிவியல் ரீதியாக நாங்கள் நிரூபித்து 
உள்ளோம். வேறு எவரேனும் இது தவறு என்று நிரூபிக்கும் 
வரையிலும், (TILL IT IS DISPROVED) இந்தத் தியரி 
சரியானதே ஆகும். இதுதான் உலகியல் நடைமுறை;
மற்றும் அறிவியல் நடைமுறை ஆகும்.
**
தாணுவின் உடலில் குண்டு இல்லை என்பதை நிரூபித்து 
உள்ளோம்.(பார்க்க: இக்கட்டுரையின் முதல் பகுதி).
அப்படியானால், ஸ்ரீபெரும்புதூர் நிகழ்விடத்தில், வேறு 
எவரிடமோ குண்டு இருந்திருக்க வேண்டும். அந்த வேறு 
எவரோ என்பவர் ராஜீவ் காந்திதான். குண்டு தாணுவிடம் 
இல்லை என்றால், ராஜீவ் காந்தியிடம் மட்டும் 
இருந்திருக்க வேண்டும். இது  வெளிப்படையானது. 
(OBVIOUS). அதாவது நிரூபிக்க வேண்டிய தேவையற்றது.
என்றாலும், இதை DYNAMICS மூலம் எளிதில் நிரூபிக்க முடியும்.
**
ராஜீவ் காந்தியிடம் குண்டு இருந்தது. அது வெடித்து விட்டது.
எதேச்சையாக வெடித்து இருக்கலாம். வேண்டுமென்றே 
ராஜீவ் காந்தி வெடிக்க வைத்தார் என்றால், அது தற்கொலை 
ஆகும். அப்படிக் கருதுவதைப் போல், உலக மகா அபத்தம் 
வேறு எதுவும் கிடையாது.
**
ஆகவே, தன் உடலில் கட்டி இருந்த குண்டானது , 
மனிதத் தவறு (HUMAN ERROR), (may be due to the 
inadvertent pressing of the button) காரணமாக வெடித்ததால் 
ராஜீவ் காந்தி உயிரிழந்தார் என்பதே உண்மையாகும்.
எனவே ஸ்ரீபெரும்புதூர் சம்பவம் ஒரு விபத்தே என்பதை 
இவ்வாறு நாங்கள் நிரூபிக்கிறோம்.
**
ராஜீவ் காந்தி தன் உடலில் ஏன் குண்டைக் கட்டிக் கொண்டு 
இருந்தார் என்ற கேள்விக்குவிளக்கம் அளிப்பது  அறிவியல் 
மன்றத்தின் வேலை அல்ல. சம்பந்தப்பட்ட இருவரில் 
(தாணு, ராஜீவ்) தாணுவிடம் குண்டு இல்லை என்றும் 
ராஜிவிடமே குண்டு இருந்தது  என்றும் நிரூபித்து உள்ளோம்.
இத்துடன் அறிவியல் மன்றத்தின் வேலை முடிந்தது.
நாங்கள் கூறியதில் முழுத் தெளிவுடன் இருக்கிறோம்.
இதை எவராலும் DISPROVE செய்ய முடியாது என்று 
நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
....இத்துடன் இக்கட்டுரை முற்றியது.....
**       
பின்குறிப்பு:
----------------------
இந்திரா காந்தியின் மரணத்தின் பின், VVIP களின் 
பாதுகாப்புப் பற்றி ஆராய்ந்த நிபுணர் குழுக்கள்,
VVIPகள், தங்களின் உடலில் வெடிகுண்டைக் கட்டிக் 
கொண்டு இருப்பது பாதுகாப்பானது என்று அறிக்கை 
அளித்தனர். (இந்த அறிக்கை சில ஆண்டுகளுக்கு 
முன்பே பொது இணையதளங்களில் இருந்து அகற்றப் 
பட்டு விட்டது.) இந்த அறிக்கையின் பரிந்துரைப்படி,
பாதுகாப்பை முன்னிட்டு ராஜீவ் காந்தி தன்  உடலில் 
குண்டைக் கட்டி இருந்தார் என்று கூறப் படுகிறது.
******************************************************************                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக