சனி, 14 மே, 2016

தோழர் வேல்முருகன் சுப்பிரமணியன் போன்ற
தீவிரத் தமிழார்வலர்கள் கவனத்திற்கு!
---------------------------------------------------------------------------------------
1) தீனா மூனா கானா எங்க தீனா மூனா கானா
என்று ஒரு பாட்டு உண்டு. திமுகவைப் புகழும்
பிரச்சாரப் பாட்டு. இந்தப் பாட்டு பற்றி இன்று
வெகு சிலருக்குத்தான் தெரியும்.
2) நம்முடைய கேள்வி. தி.மு.க என்று தானே
சொல்ல வேண்டும்? ஏன் தீனா மூனா கானா
என்று சொல்கிறார்கள்?
**
3) ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா என்று
சொல்கிறோமே, அது என்ன "னா?"
4) அது ஒரு சாரியை. பகுபத உறுப்பிலக்கணம்
படித்தவர்கள் சாரியை பற்றி அறிவார்கள்.
**
5) ஏனச் சாரியை பற்றி இன்று பலருக்கும் தெரியாது.
6) இந்த "சாரியை"யின் இருப்பும் அதன் தேவையும்
கருதத் தக்கது.
7) இது ஒரு உண்மையைப் புலப்படுத்துகிறது.
தமிழ் சொற்குறுக்கங்களைக் கையாள
இயலாத மொழி என்பதை இந்தச் சாரியையின்
இருப்பு புலப்படுத்துகிறது.
**
8) குறைந்தது 1000 சொற்குறுக்கங்களை அடிக்கடி
பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. தமிழில்
அறிவியல்/ கணினி  கட்டுரை எழுதுவோர்
படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல.  
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக