வெள்ளி, 20 மே, 2016

வஞ்சப் புகழ்ச்சி இல்லை. ஏழை எளிய மக்கள்
தங்கள் பிழைப்பை விட்டு விட்டு வாக்களிக்க
வருவது என்பது 1952இல் கற்பனையிலும்
நினைத்துப் பார்க்க இயலாத ஒன்று. எனவே
பெருந்தலைவர் காமராசர் "இன்று நீங்கள் வயல்
வேலைக்குச் செல்ல விட்டாலும் பரவாயில்லை;
ஓட்டுப் போத வாருங்கள்; வேலைக்குப் போனால்
என்ன கூலி கிடைக்குமோ அதை உங்களுக்கு
நான் தந்து விடுகிறேன்" என்று கூறி ஒரு ரூபாய்
கொடுத்த் வாக்களிக்க வைத்தார்.  1962இல்
நெல்லை மாவட்டத்தில் எங்கள் ஊரில்
ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் செயலை
"நடுகைச் சம்பளம் போடுவது"என்றுதான்
குறிப்பிடுவார்கள். இதையெல்லாம் கண்ணால்
பார்த்தவன் நான்.   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக