வியாழன், 26 மே, 2016

உள்ளபடியே நண்பர் கூறியதன் பொருள் என்ன என்று
தெரியாமல்தான் விளக்கம் கேட்டுள்ளேன்.  "சீமான்" என்ற சொல்லில் உள்ள "கால்" தமிழில் தொன்றுதொட்டு இருந்து
வருகிறது. எனவே அதில் எவ்வாறு பெரியாரைத் தொடர்பு
படுத்துகிறார் என்பது புலப்படவில்லை.
**
எம்.ஜி ராமச்சந்திர மேனன் அரசாணை வெளியிடுவதற்கு
முன்னரே, நான் புகுமுக வகுப்பு படித்த காலந்தொட்டே
லை, னை, றா, னோ ஆகியவற்றைப் பயன்படுத்தி
வருகிறேன். நிற்க. இதில் அவரைக் குற்றவாளிக்
கூண்டில் நிறுத்துவது என்ற கற்பனைக்கே இடமில்லை.
"அருள்கூர்ந்து விளக்கவும்" என்ற தொடரால் எவரையும்
குற்றவாளிக் கூண்டில் நிறுத்த இயலாது. விபரீதக்
கற்பனைகளைத் தவிர்க்கவும். 
**
துணையெழுத்து, கொம்பு, கால் ஆகியவை குறித்த
இந்த நிகழ்வுடன் பொருத்தப்பாடு உடைய, சுவை
மிகுந்த ஒரு பழம்பாட்டை  இங்கு நினைவுறுத்துகிறேன்.
**
சென்னிமலை வேலவர்க்குச் சேர்ந்தகொம்பி ரண்டுண்டு
கன்னிகுற வள்ளிக்குக் காலில்லை முன்னமே
ஆட்டுக்குக் கொம்பில்லை ஆனைக்குக் காலில்லை
பாட்டுக்குள் ஆராய்ந்து பார்.
**
இது ஓர் அற்புதமான வெண்பா. சுவைக்கவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக