சனி, 28 மே, 2016

மருத்துவ நுழைவுத் தேர்வும்
சிவில் சர்வீஸ் தேர்வும்!
----------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
1) சிவில் சர்வீஸ் தேர்வு வேலைக்கான தேர்வு. இதில்
தேறியவுடன் வேலை கிடைக்கும்.
2) படித்துப் பட்டம் பெற்ற பட்டதாரிகள் மட்டுமே
சிவில் சர்வீஸ் தேர்வில் பங்கேற்க முடியும்.
3) சிவில் சர்வீஸ் தேர்வு என்பது ஒற்றைத் தேர்வு அல்ல.
priliminary, main, interview என்று பல தேர்வுகளின் தொகுப்பு.
4) சிவில் சர்வீஸ் தேர்வு வயது வந்தோருக்கு (adults)
நடத்தப் படும் தேர்வு.
**
மாறாக, மருத்துவ  நுழைவுத் தேர்வு என்பது
(NEET அல்லது CET,அல்லது தமிழ்நாட்டில்
முன்பிருந்த TNPCEE)
1) வேலைவாய்ப்புக்கான தேர்வு அல்ல. படிப்பதற்காக
நடத்தப்படும் தேர்வு.
2) இது ADULTக்கானது அல்ல. குழந்தைகளுக்கானது.
மருத்துவ சேர்க்கை எந்த ஆண்டு நடைபெறுகிறதோ,
அதற்கு முந்திய ஆண்டு டிசம்பர் 31இல் 17 வயது (பதினேழு)
கடந்துள்ள குழந்தைகள் மட்டுமே இத்தேர்வை எழுத
முடியும்.
3) இது படிப்பதற்கான வெறும் நுழைவுத் தேர்வு
என்பதால், மாணவனின் ஆளுமையோ IQவோ
சோதிக்கப் படுவதில்லை. அதற்குத் தேவையும் இல்லை.
4) எனவே இது ஒற்றைத் தேர்வாக, மூன்று மணி
நேரத்தில் சகலமும் முடிந்து விடுவதாக மட்டுமே
இருக்கிறது. இருக்க வேண்டும்.
5) படிக்கப் போகிறவனைத் தேர்வு செய்வதும்,
படித்து முடித்தவனைத் தேர்வு செய்வதும் ஒன்றல்ல.
இரண்டின் அடிப்படையும் கோட்பாடும் வேறானவை.

எனவே, எந்த நிலையிலும் ஒரு மருத்துவ நுழைவுத்
தேர்வானது சிவில் சர்வீஸ் தேர்வு போன்று
இருக்கக் கூடாது. குருவி தலையில் பனங்காயை
வைக்கக் கூடாது.        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக