சனி, 28 மே, 2016

பொருள் உற்பத்தி சார்ந்த அனைத்துச் சொற்களும்
ஆங்கிலத்தில்தான் உள்ளன. ஏனெனில் சமூகத்தின்
மொத்தப் பொருள் உற்பத்தித்துறையில் தமிழ்
இல்லை.
**
வீரவநல்லூரில் உள்ள எங்கள் மக்களை விட
தமிழ்ப்பற்று மிகுந்தோர் உலகில் யாரும் இல்லை.
அவர்களின் பேச்சு வழக்கில் மிக இயல்பாக,
வாஷிங் மெசின், லேத், டயர், டியூப்பு, லைட்டு,
டி.வி., ஃபோன், பிரிச்சு (Refrigerator), சுச்சு  (switch)
குக்கர், விசில், ஃபேன் (fan), மில்லு (mill), பேட்டரி லைட்டு
(கஞ்சிக்கு லாட்டரி, கையிலே பேட்டரி என்று
பழமொழியே உண்டு)...... இவ்வாறு பல சொற்கள்
புழக்கத்தில் உள்ளன.
**
இதில் மக்களைக் குறை சொல்ல என்ன இருக்கிறது?
சமூகத்தின் பண்ட உற்பத்தியில் இடம் பெற இயலாத
மொழி வழக்கு வீழ்ந்து போவது இயற்கையே.         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக