திங்கள், 23 மே, 2016

தேர்தல் பரப்புரையின்போது பேசப்பட்ட ஒவ்வொரு
விஷயத்தையும் எடுத்துக் கொண்டு விமர்சிப்பது
நமது நோக்கம் அல்ல. அது தேவையும் அல்ல.
ஆனால், விஜயகாந்தை அம்பேத்கருடன் ஒப்பிட்டது
அவ்வளவு சுலபமாகக் கடந்து செல்கிற விஷயம் அல்ல.
**
கலைஞர் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க
விரும்பினார்  என்பது ரகசியம் அல்ல. அதற்காக
விஜயகாந்தை புரட்சிப் பெரியார் என்று கலைஞர்
முகஸ்துதி செய்யவில்லை. இன்னும் சொல்லப்
போனால், ஆட்சியில் பங்கு கேட்ட விஜயகாந்துக்கு
இல்லை என்று கலைஞர் மறுத்த காரணத்தால்தான்
அக்கூட்டணி உருவாகவில்லை.
**
திருமாவளவன் விஜயகாந்துடன் கூட்டணி வைத்தது 
தவறு என்று நாம் சொல்லவில்லை. அவரை முதல்வர்
வேட்பாளராக ஆக்கியதையும் நாம் விமர்சிக்கவில்லை.
இவை திருமாவின் அரசியல் தேவையில் இருந்து
செய்யப்படும் செயல்கள். ஆனால், விஜயகாந்தை
அம்பேத்கருடன் ஒப்பிடுவதற்கான எந்த அரசியல்
தேவையும் திருமாவுக்கு இல்லை. அதனால்தான்
இதைக் கண்டிக்க நேர்கிறது. இது இடித்துரைத்தல்
என்ற திணையில் வரும். திணை என்பது ஒழுக்கம்
என்று பொருள்படும்.
**
நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு
என்கிறார் வள்ளுவர். அதற்கு இணங்க,
திருமாவளவனின் மிகுதிக்கண் மேற்சென்று
இடிக்கிறேன் நான். இதில் எவரேனும் குறை காண
இயலுமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக