வியாழன், 26 மே, 2016

போலிக் கம்யூனிஸ்டுகளின் மரணம் ஏன்?
தா பாண்டியனின் ஜெயா விசுவாச அரசியலும்
தளி ராமச்சந்திரனின் ஊழல்-கொலைகார
அரசியலும்தான் மாற்று அரசியலா?
------------------------------------------------------------------------------------------
தா பாண்டியனின் ஆதரவாளர்கள் இந்தத்
தேர்தலில் அதிமுகவுக்குத்தான் வாக்களித்தனர்
என்ற உண்மை கசியத் தொடங்கி விட்டது.

முத்தரசனுக்கு ஜெயா பதவியேற்பு விழாவுக்கு
அழைப்பு இல்லை. ஜி ராமகிருஷ்ணனுக்கு
அழைப்பு இல்லை. அகில இந்தியத் தலைவர்கள்
சுதாகர் ரெட்டிக்கோ எச்சூரிக்கோ அழைப்பு
இல்லை. ஆனால் தா பாண்டியனுக்கு மட்டும்
அழைப்பு! இது எதைக் காட்டுகிறது?

"புலிகள் நிரம்பிய கானகத்தில் புள்ளிமான் வென்றது
போல வெற்றி பெற்றார் ஜெயலலிதா" என்று திருவாய்
மலர்ந்து அருளியுள்ளார் தா பாண்டியன்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலக் குழுவின்
அறிக்கையோ இதற்கு நேர்மாறாக இருக்கிறது.

போலிக் கம்யூனிஸ்டுகள் முன்வைக்கிற மாற்று
அரசியல் என்பது தா பாண்டியனின் ஜெயா விசுவாச
அரசியலே. தளி ராமச்சந்திரனின் ஊழல் கொலைகார
அரசியலே.

மக்கள் இந்தக் கயவர்களை நம்பவில்லை. தமிழக
சட்ட மன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத
அளவுக்கு, ஒரு போலிக் கம்யூனிஸ்ட் கூட சட்ட
மன்றத்துக்குள் போக முடியவில்லை! இந்தப்
போலிகளை இகழ்ச்சியுடன் நிராகரித்தார்கள் மக்கள்!
************************************************************************  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக